தவானை ஓரம்கட்ட பிசிசிஐ இப்படி பண்ணலாமா? கொதிக்கும் ரசிகர்கள்
தவானை ஓரம்கட்ட, ஜிம்பாப்வே தொடரில் திடீரனெ கே.எல்.ராகுலை பிசிசிஐ கேப்டனாக அறிவித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாதம் ஆசிய கோப்பைக்கு முன்னதாக ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, ஷிகர் தவான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தவானிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்த தேர்வாளர்கள், அணிக்கு திரும்பியிருக்கும் கேஎல் ராகுலிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். பிசிசிஐ-ன் இந்த செயல் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் பதவி பறிப்பு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) மருத்துவக் குழுவால் கே.எல்.ராகுல் உடல்தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான அணியில் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டார் அத்துடன் கேப்டனாக இருந்த ஷிகர் தவானை, துணைக் கேப்டனாக அறிவித்து கே.எல் ராகுலிடம் கேப்டன் பொறுப்பையும் ஒப்படைத்தனர். தவான் போன்ற ஒருவரை கேப்டனாக அறிவித்துவிட்டு, சீரிஸ் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பிசிசிஐ பறித்தது, அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அணிக்கு திரும்பியதும் லக்! இந்திய அணிக்கு கேப்டனான கேஎல் ராகுல்!
ரசிகர்கள் மிகவும் கோபம்
தவானின் கைகளில் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிசிசிஐ மீது தங்களின் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சிலர் இது தவானுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கருதுகின்றனர். சிலர் இது மிகவும் தவறான முடிவு என்று சாடியுள்ளனர்.
ராகுல் என்ட்ரி
குடலிறக்க ஆபரேஷனில் இருந்து ராகுல் மீண்டு வந்தார். அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவிருந்தார். ஆனால் கோவிட்-19 பாதிப்பால் அவரால் விளையாட முடியவில்லை. ராகுல் உடல்நிலை சரியில்லாமல் குணமடைய நேரம் எடுத்துக்கொண்டதால், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஆசிய கோப்பை வரை அவர் முழு உடல்தகுதியுடன் இருப்பதற்காக, உடல் தகுதி பெற அவருக்கு நேரம் வழங்கப்பட்டது. தற்போது உடல்தகுதியை எட்டியிருக்கும் அவருக்கு கேப்டன் பதவியையும் பிசிசிஐ கொடுத்துள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.
மேலும் படிக்க | நீரஜ் சோப்ராவா, ஆசிஷ் நெஹ்ராவா ? :பாக். நபருக்கு குட்டு வைத்த சேவாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ