Sanjay Bangar | பெண்ணாக மாறிய பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் - போட்டோ வைரல்
Sanjay Bangar Son | பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சய் பாங்கரின் மகன் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து இப்போது பெண்ணாக மாறியுள்ளார். அவரின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
Sanjay Bangar | இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர். பிரபல கிரிக்கெட்டரான இவரின் மகன் ஆர்யன் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியிருக்கிறார். அந்த புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அவர். அத்துடன் தன்னுடைய பெயரை ஆர்யன் என்பதை ’அனயா பாங்கர்’ என மாற்றிக் கொண்டுள்ளார். இப்போது மான்செஸ்டரில் வசிக்கும் இவர், தந்தையைப் போலவே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அங்கிருக்கும் உள்ளூர் கிரிக்கெட் கிளப்பான இஸ்லாம் ஜிம்கானா அணியில் கிரிக்கெட் விளையாடி வந்தார். இந்த நிலையில் தான் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.
பெண்ணாக மாறிய சஞ்சய் பாங்கர் மகன்
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அனயா பாங்கர், வலிமையை இழந்தாலும் மகிழ்ச்சியை பெற்றிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். உடல் மாறிகிறது, இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஒவ்வொரு அடியும் என்னைப் போலவே உணர்கிறது என்று எழுதியிருக்கிறார். ஆர்யனுக்கு இப்போது 23 வயதாகிறது. அவர் பாலினம் மாறுவதற்காக ஹார்மோன் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். தந்தை சஞ்சய் பாங்கர் குறித்து ஆர்யன் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
சஞ்சய் பாங்கர் மகன் எழுதிய போஸ்ட்
அதில், " சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது. என் அப்பா இந்திய அணிக்காக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதை நான் பிரம்மிப்புடன் பார்த்திருக்கிறேன். அவருடைய சுவடுகளை பின்பற்றி என்னுடைய பயணத்தையும் நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டேன். அவர் கிரிக்கெட் விளையாட்டில் காட்டிய அர்பணிப்பும், ஒழுக்கமும் எனக்கும் உத்வேகம் அளித்தன. அவரைப் போலவே ஒருநாள் என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், என் திறமையை மெருகேற்றுவதில் என் நேரத்தை செலவிட்டேன். ஆனால் இங்கு எதார்த்ததை எதிர்கொள்கிறேன். ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியில் (HRT) ஒரு டிரான்ஸ் வுமன் என்ற முறையில், என் உடல் கடுமையாக மாறிவிட்டது. நான் ஒரு காலத்தில் நம்பியிருந்த தசை, விளையாட்டு திறன்களை இழந்து வருகிறேன். நான் நீண்ட காலமாக விரும்பிய விளையாட்டு என்னிடமிருந்து நழுவுகிறது" என்று ஆர்யன் எழுதியிருக்கிறார். சஞ்சய் பாங்கர் இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.
ஹார்மோன் மாற்று சிகிச்சை என்றால் என்ன?
ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) என்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுடன் தொடர்புடைய அறிகுறிகளைப் போக்க வடிவமைக்கப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சையாகும். மாதவிடாய் காலத்தில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனின் உடலின் இயற்கையான உற்பத்தி குறையும். அப்போது, இரவில் வியர்த்தல், மனநிலை மாற்றங்கள் மற்றும் யோனி வறட்சி போன்ற அறிகுறிகள் தென்படும். HRT இந்த குறைந்து வரும் ஹார்மோன்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கருப்பை நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் புரோஜெஸ்ட்டிரோன் முதன்மையாக கர்ப்பப்பையின் உட்பகுதியை புற்றுநோய் அபாயங்களிலிருந்து பாதுகாக்க தேவைப்படுகிறது. மேலும், இந்த சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் தீவிர கலந்தாலோசனை செய்ய வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க | பெர்த் டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லை! இவர் தான் கேப்டன்! கம்பீர் அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ