ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, இலங்கை அணிக்கு பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் ஆகியோர் ஓப்பனர்களாக களம் புகுந்தனர்.குசால் மெண்டிஸை ட்க-அவுட்டாகி இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் அணி அழுத்தம் கொடுத்தது. பாக். அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நிசாங்கா இதிலும் அணிக்கு பக்கபலமாக இருப்பார் என எண்ணப்பட்டது. 


மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்த 3 வீரர்கள் நீக்கம்?


ஆனால், இந்த போட்டியில் 8 ரன்களை எடுத்திருந்தபோது, ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் நிசாங்கா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குணதிலகாவும் 1 ரன்னில் வெளியேற, இலங்கை பவர்பிளே ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை எடுத்திருந்தது.சிறிதுநேரம் தாக்குப்பிடித்த தனஞ்ஜெயா 28 (21) ரன்களிலும், கேப்டன் ஷனாகா 2 (3) ரன்களிலும் பெவிலியன் திரும்பினா். 


 மறுமுனையில், பனுகா ராஜபக்ச உறுதியாக நின்று ரன்களை குவித்தார். அவருக்கு ஹசரங்காவும் உறுதுணையாக நின்று அதிரடி காட்டினார். இந்த ஜோடி 50 ரன்களை கடந்த நிலையில், ஹசரங்கா 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 36 ரன்களை எடுத்து ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


ஆனால், தொடர்ந்து, அதிரடி காட்டிய ராஜபக்ச அரைசதம் கடந்து அசத்தினார். மேலும், சமிகா கருணாரத்னே உடன் நின்று கடைசிவரை விக்கெட்டை இழக்காமல் ராஜபக்ச சிறப்பாக விளையாடினார். இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது.


ராஜபக்சே 71 (53) ரன்களுடனும், கருணாரத்னே 14 (14) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஹரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகளையும், நசிம் ஷா, இஃப்திகர் அகமது, ஷடாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 


171 ரன்கள் என்ற சற்றே பெரிய இலக்கை பாகிஸ்தான் அணி துரத்தியது. வழக்கம் போல், பாக். கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், பவர்பிளேயின் 3ஆவது ஓவரிலேயே பாபர் 5 (3) ரன்களுக்கும், ஃபக்கார் ஜமான் ரன் ஏதும் இன்றியும் பிரமோத் மதுஷன் ஓவரில் ஆட்டமிழந்தனர். பவர்பிளே முடிவில் பாக். அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 37 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து, முகமது ரிஸ்வான் - இஃப்திகர் அகமது ஜோடி மிகப்பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3.4 ஓவரில் இணைந்த இந்த ஜோடி, 13.2 ஓவர் நீடித்து 69 ரன்களை எடுத்தது. 


அப்போது இஃப்திகர் 32 ரன்களில் மதுஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், பாக். பேட்டிங் வரிசை அப்படியே சரியத் தொடங்கியது. கருணாரத்னே வீசிய 16ஆவது ஓவரில் முகமது நவாஸ் ஆட்டமிழந்த நிலையில், ஹசரங்கா வீசிய அடுத்த ஓவர் இலங்கை அணிக்கு பெரிய திருப்புமுனையாக இருந்தது.


அரைசதம் கடந்திருந்த ரிஸ்வான் முதல் பந்திலும், ஆசிப் அலி 3ஆவது பந்திலும், ஷடாப் கான் 5ஆவது பந்திலும் ஆட்டமிழந்தனர். இதனால், பாக். அணி கடுமையான சரிவை சந்தித்தது. கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாக். அணியால் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, தனது 6ஆவது ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் 71 ரன்களை குவித்த இலங்கை பேட்டர் பதுகா ராஜபக்ச ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் 66 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹசரங்கா தொடர நாயகனாக தேர்வானார்.


மேலும் படிக்க | இலங்கை வெற்றிக்கு தோனி தான் காரணமா? - உண்மையை கூறிய கேப்டன் தசுன் ஷனகா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ