இலங்கை வெற்றிக்கு தோனி தான் காரணமா? - உண்மையை கூறிய கேப்டன் தசுன் ஷனகா!

Srilanka vs Pakistan: ஆசிய கோப்பை 2022 இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை கைப்பற்றி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 12, 2022, 09:19 AM IST
  • ஆசிய கோப்பையை வென்றது இலங்கை அணி.
  • பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டியில் வெற்றி பெற்றது.
  • வெற்றியை இலங்கை அணியினர் கொண்டாடி வருகின்றனர்.
இலங்கை வெற்றிக்கு தோனி தான் காரணமா? - உண்மையை கூறிய கேப்டன் தசுன் ஷனகா! title=

CSK அணியின் வெற்றியை மனதில் வைத்துதான் டாஸ் இழந்த போதிலும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை வந்தது என்று ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியை நினைவு கூர்ந்து தசுன் ஷனகா பேசியுள்ளார்.  2022 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பிறகு பாகிஸ்தான் அணிதான் கோப்பை வெல்லும் என்று பலர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இலங்கை அணி வெற்றி பெற்று அசத்தி உள்ளது. பேட்டிங், பவுலின், பீல்டிங் என சிறப்பாக ஆடி வென்றுள்ளது.  ஆசிய கோப்பை போட்டியின் ஆரம்பத்தில் அட்டவணையில் கடைசி இடத்தில் இருந்தாலும் தற்போது முதல் அணியாக வந்துள்ளது.  

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இலங்கை அணி, அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  இலங்கை அணிக்கு இந்த ஆசிய கோப்பை உலக கோப்பையை வெல்ல நம்பிக்கை அளித்துள்ளது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐபிஎல் 2021 மற்றும் டி20 உலகக் கோப்பை 2021 ஆகியவை அங்கு நடந்துள்ளதால் இதனை நன்கு மனதில் வைத்து ஆடி இலங்கை வென்றுள்ளது.  

 

மேலும் படிக்க | உலக கோப்பைக்கான இந்திய அணி இதுதான்! வெளியான தகவல்!

கோப்பையை வென்ற பிறகு கேப்டன் தசுன் ஷனக பேசுகையில், டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பீல்டிங் செய்த போது, ஐபிஎல் 2021 இறுதி போட்டி தான் நினைவிற்கு வந்தது என்று கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)  இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) க்கு எதிரான ஃபாஃப் டு பிளெசிஸின் 59 பந்தில் 86 ரன்களின் காரணமாக, 192 ரன் என்ற மிகப்பெரிய ஸ்கோரைப் பெற்றது. இரண்டாவதாக பேட்டிங் செய்த KKR 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டி தான் எங்களுக்கு டாஸ் இழந்த போதிலும் உத்வேகம் கொடுத்ததாக இலங்கை கேப்டன் கூறியுள்ளார்.  

 

இலங்கை 58 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த போதிலும், பானுகா ராஜபக்ச ஆட்டமிழக்காமல் 45 பந்தில் 71 ரன்களும், வனிந்து ஹசரங்காவின் 21 பந்தில் 36 ரன்களும் எடுத்து இலங்கையை 170 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.  பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.  கடந்த 5 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி தோற்கவில்லை. அவர்கள் 2018 முதல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 5 போட்டியில் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.  

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்த 3 வீரர்கள் நீக்கம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News