Sixes of Naseem: பாகிஸ்தானை ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்ற நசீம் வீடியோ
Successive Sixes of Naseem: பாகிஸ்தானை ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்ற நசீம்! இரண்டு சிக்ஸர்களால் சாதனை படைத்த கிரிக்கெட்டர்
ஷார்ஜா: ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 7) நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் தனது சூப்பர் ஃபோர் மோதலில் ஆப்கானிஸ்தானை சந்தித்தது. பாபர் அசாம் தலைமையிலான அணி போட்டியில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை, இந்தியாவைப் போலவே பாகிஸ்தான் அணி தோல்வியடையச் செய்தது. ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அடுத்த போட்டியில் இலங்கை அணியிடம் வீழ்ந்ததால் இந்திய அணியின் ஆசிய கோப்பை கனவு ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறலாம்.
பாகிஸ்தானின் வீரர் நசீம் ஷா தனது நான்காவது டி20 ஐ விளையாடினார். அவரது பேட்டிங், பாகிஸ்தான் அணிக்கு பலம் சேர்த்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, 87/3 என்ற நிலையில் இருந்து 110/8 என்று மாறியபோது, வெற்றி எட்டாக்கனியாகும் நிலையில் பாகிஸ்தான் தவித்தது.
மேலும் படிக்க | இன்னும் இந்தியாவிற்கு ஆசிய கோப்பை இறுதிக்கு செல்ல வாய்ப்பு வாய்ப்புள்ளதா?
கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 6 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில், 19 வயதான நசீம் நான்கு பந்துகள் மீதமிருக்க, இரண்டு தொடர்ச்சியான சிக்ஸர்களை அடித்தார். அவரது பெரிய ஸ்ட்ரோக்குகள் பாகிஸ்தான் ரசிகர்களை ஆனந்த கூச்சலிட வைத்தது. நசீமின் சிக்ஸர்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கு காரணமானது. மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களின் ஆனந்த கூச்சல்களை சொல்லும் வீடியோ இதோ:
ஆட்டத்திற்குப் பின்பு பேசிய கேப்டன் பாபர், நசீமின் பெரிய ஷாட்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தார், "நான் முன்பு நசீம் இப்படி விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன், அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. இந்த தருணம் ஜாவேத் மியாண்டத்தின் சிக்ஸரை நினைவூட்டுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | Asia Cup2022: விராட் கோலிக்காக காத்திருக்கும் சாதனை
இதற்கிடையில் தோல்வி கொடுத்த அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாத ஆஃப்கானிஸ்தான் ரசிகர்கள், மைதானத்தில் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியின் முடிவில் இருநாட்டு ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டதை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் விமர்சித்து ஆஃப்கன் ரசிகர் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்
கடைசி வரை போராடியும் பாகிஸ்தான் வீழ்த்த முடியாததால் ஏமாற்றம் அடைந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள், ஷார்ஜா மைதானத்தில் இருந்த இருக்கைகள் தூக்கி வீசி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்குக் அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுக்க இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி நான்கு போட்டிகளின் வெற்றி விவரங்கள்:
ஆசிய கோப்பை 2018 போட்டியில் பாகிஸ்தான் 3 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது என்றால், ஒருநாள் உலகக் கோப்பை 2019இல், 2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதேபோல, T20I உலகக் கோப்பை 2021 போட்டியில் 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது, தற்போது ஆசிய கோப்பை 2022 போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது
மேலும் படிக்க | இந்த பிளேயர் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ