ரெண்டு பேரும் என்ன பண்றாங்கனே தெரியலை - சுனில் கவாஸ்கர் விளாசல்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் தொடர் மோசமான செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு பேட்டிங்கிலும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இந்திய அணியின் பெரிய கோப்பைகளை வெல்லவில்லை. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் படுதோல்வியை சந்தித்து வெறும் கையோடு திரும்பியது. இந்த போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மாவின் தனிப்பட்ட ஆட்டம் மற்றும் கேப்டன்ஷிப் மீது பெரிய கேள்விகள் எழுந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்திருப்பதுடன், பயிற்சியாளர் டிராவிட்டின் பணி குறித்தும் கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க | உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் என்ட்ரி...? புதிய அப்டேட் சொல்லும் நிர்வாகிகள்!
சுனில் கவாஸ்கர் கோபம்
சுனில் கவாஸ்கர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், 'ரோஹித் சர்மா மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இந்தியாவில் அவரது ஆட்டம் மற்றும் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்த நிலையில், வெளிநாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்டம் இல்லை. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சிறப்பாக இல்லை. டி20 -யில் சிறந்த வீரர்கள் மற்றும் அனுபவங்கள் அதிகம் இருந்த போதிலும் இந்திய அணியால் டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
டிராவிட்டின் முடிவு என்ன?
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோல்வியடைந்ததையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். டாஸ் போடும்போது மேகமூட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்திய அணி அதனை கருத்தில் கொள்ளவில்லை. டிராவிஸ் ஹெட்டின் பலவீனம் பற்றி உங்களுக்குத் தெரியாது, இல்லையா? அவர் 80 ரன்கள் எடுத்த போது மட்டும் ஏன் பவுன்சர்கள் பயன்படுத்தப்பட்டன?" என கேட்டுள்ளார்.
ரோகித் சர்மாவுக்கு கேள்வி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தயாராக இந்திய அணிக்கு நேரம் கிடைக்கவில்லை என்ற ரோஹித் சர்மாவின் கூற்றையும் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசும்போது, 'நாம் என்ன மாதிரியான தயாரிப்பைப் பற்றி பேசுகிறோம்?. நீங்கள் தயாரிப்பைப் பற்றி பேசும்போது, அதைப் பற்றி யதார்த்தமாக இருங்கள். 15 நாட்களுக்கு முன்பே சென்று இரண்டு பயிற்சி ஆட்டங்களை விளையாடுங்கள். முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கலாம். ஆனால் கடைசி வரை ஐபிஎல் விளையாடுகிறீர்கள். தோல்விக்கு பிறகு என்னென்னமோ காரணம் சொல்கிறீர்கள் என விளாசியுள்ளார்.
மேலும் படிக்க | விராட் கோலி ஒன்னும் சூப்பர் இல்லை, வார்னர் இனி அவ்வளவு தான் - ஆகாஷ் சோப்ரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ