IPL 2020 போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதின. 49வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 எடுத்த கொல்கத்தா அணி் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நிர்ணையித்தது.
அடுத்து களம் இறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் சென்னை விளையாடியுள்ளது. அதில்  4 போட்டிகளில் மட்டுமே வென்ற அணி, இன்று பெற்ற வெற்றி சென்னைக்கு உத்வேகம் அளிக்கும். பிளேஆப் சுற்றில் இருந்து சென்னை அணி (Chennai Super Kings) வெளியேறி விட்டது. ஆனாலும், இன்றைய சென்னை அணியின் வெற்றி பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான கொல்கத்தா அணியின் கனவை தொய்வடைய செய்துவிட்டது.


கே.கே.ஆர் (Kolkata Knight Riders) அணியும் 12 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 6 வெற்றியும், 6-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 12 புள்ளிகள் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, புள்ளிகள் அட்டவணையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 
18 வது ஓவரின் முதல் பந்தில் Lungi Ngidiயின் பந்தில் சாம் குர்ரான் அவுட்டானார். இதனால் நிதீஷ் ராணாவின் அற்புதமான ஆட்டமும் முடிவுக்கு வந்தது. கொல்கத்தா அணியின் சிறந்த பேட்ஸ்மேன் 61 பந்துகளில் 87 ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தார்.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR