மீண்டும் சிஎஸ்கே அணியில் ரெய்னா?
ஐபிஎல் 2022 ஏலத்தில் ரெய்னாவை எந்த அணியும் வாங்காமல் இருந்தது.
இந்த வருடம் ஐபிஎல்-ல் லக்னோ மற்றும் குஜராத் என இரண்டு புதிய அணிகள் இணைந்தன. மேலும், ஐபிஎல் மெகா ஏலமும் இந்த ஆண்டு நடைபெற்றது. பல முக்கிய வீரர்கள் தங்களது அணியில் இருந்து மாறி வேறு அணிகளில் விளையாடி வருகின்றனர். மும்பை அணியில் முக்கிய வீரர்களாக இருந்த டி காக், போல்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா போன்ற வீரர்கள் தற்போது வேறு அணிகளில் ஆடுகின்றனர். சென்னை அணியில் இருந்த தாகூர், டு பிளசிஸ், ஹேசல்வுட் போன்றோரும் ஆர்சிபி, டெல்லி அணிகளில் விளையாடுகின்றனர்.
மேலும் படிக்க | தமிழக வீரரின் அதிரடியில் வீழ்ந்த டெல்லி!
சிஎஸ்கே அணியின் தூணாக இருந்து வந்த சுரேஷ் ரெய்னா, இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. அவரின் ஆரம்ப விளையான 2 கோடிக்கு எந்த அணியும் முன் வந்து வாங்கவில்லை. சென்னை அணி சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது ரெய்னா ஐபிஎல்-ல் கமென்டரி செய்து வருகிறார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்தது. பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பியதால் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்தது.
ஏலத்தில் தீபக் சாஹரை 14 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. இருப்பினும், காயம் காரணமாக சாஹர் இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், சாஹருக்கு மாற்று வீரரை தற்போது சென்னை அணி தேடி வருகிறது. மாற்று வீரராக சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக உரிமையாளருக்கும், ரெய்னாவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பங்களாதேஷ் வீரர் சாகிப் அல் ஹசனிடமும் சென்னை அணி பேசி வருகிறது.
மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் பற்றி சச்சின் தெண்டுல்கர் மகள் கூறியது இதுதான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR