தமிழக வீரரின் அதிரடியில் வீழ்ந்த டெல்லி!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2022, 11:49 PM IST
  • டெல்லி அணி படுதோல்வி.
  • பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வி.
  • கார்த்திக்கின் அதிரடியில் பெங்களூரு வெற்றி.
தமிழக வீரரின் அதிரடியில் வீழ்ந்த டெல்லி! title=

இன்றைய ஐபிஎல் 2022 போட்டியில் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் மோதின.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி வான்கடே மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற  பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

மேலும் படிக்க | IPL 2022 மைதானத்தில் ரசிகர்களை ஏமாற்றிய ரோஹித் சர்மா!

முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிரடி காத்திருந்தது. அனுஜ் ராவத்
முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.  டு பிளெசிஸ் 8 ரன்களுக்கு வெளியேறினார்.  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோலி 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.  40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி தடுமாறியது.  மாக்வெல் அதிரடியில் பெங்களூர் அணி போட்டியை தன் பக்கம் திருப்பியது.  கடைசியாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 34 பந்துகளில் 66 அடிக்க பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது.

 

190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் தடுமாறியது.  டேவிட் வார்னர் மட்டும் 66 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் சொதப்பினார்.  கேப்டன் பந்த் 34 ரன்கள் அடிக்க கடைசியில் தடுமாறிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதனால் இந்த போட்டியில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் பற்றி சச்சின் தெண்டுல்கர் மகள் கூறியது இதுதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News