துபாய்: 2021 டி 20 உலகக் கோப்பையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சிறந்த போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த மாபெரும் போட்டியின் மீதே ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இருக்கும். இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் வெற்றி பெறுவதற்கு இந்தியா வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் (T20 World Cup) போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.


ALSO READ | T20 World Cup பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் கதாநாயகர்கள் யார்?


குரூப்-1: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம்
குரூப்-2: இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா


இந்நிலையில், சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் கடைசியாக சந்தித்த 2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த முறையும் இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. மேலும் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி (MS Dhoni) இருப்பது இன்னொரு பலமாகும். அவர் அணிக்கு நிறைய யோசனைகளை வழங்கியுள்ளார்.


இதுவரை உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் தோல்வியை கனடா பாகிஸ்தான் இந்த முறை தனது உத்வேக ஆட்டத்தை காண்பிக்க வியூகங்களை தீட்டி வருகிறது. கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், பஹார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் முதுகெலும்பாக உள்ளனர். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் மிரட்டக்கூடியவர்கள்.


ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக அமைவாரா வருண் சக்கரவர்த்தி? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR