உலக கோப்பை 2021ல் முக்கியமான போட்டிகளில் விராட் கோலிக்கு மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி துருப்புச் சீட்டாக இருப்பாரா என்று எதிர்பார்க்கபடுகிறது. பெரிதும் எதிர்பார்க்கபடும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி 20 உலகக் கோப்பை போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்திய அணி இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 7விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. தற்போது இந்திய மருத்துவக் குழுவும் மொத்த கவனமும் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா பக்கம் உள்ளது. வருன் முழங்கால் வலியுடன் உள்ள நிலையில், மருத்துவக் குழு ஹர்திக் பாண்டியா பந்துவீச தயார் செய்து வருகிறது. மேலும், இந்திய அணி வருணனை முக்கியமான ஆட்டங்களில் பயன்படுத்த பார்க்கிறது.
ALSO READ பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை பெருசா எதுவும் செய்யவில்லை; இந்தமுறை சாதிப்பாரா ரோகித்?
இது தொடர்பாக எஎன்ஐ செய்தி நிறுவன அதிகாரி கூறுகையில், இந்திய மருத்துவ குழு வருண்னை முக்கியமான ஆட்டங்களில் விளையாட வைக்க முயற்சி செய்து வருகிறது. எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி டி20 போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் வருண். நடந்து முடித்த ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார். இந்திய அணியின் முக்கியமான வீரராக கருதப்படும் வருணை விராட் கோலி மற்றும் இந்திய அணி முக்கிய ஆட்டங்களில் விளையாட வைக்க முயற்சி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
தற்போது வரை வருணின் முழங்கால்கள் 100 சதவிகிதம் சரியாக வில்லை. எனவே, போட்டிகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே வருண் களம் இரக்கபடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய போட்டி என்று வரும்பொழுது வருணின் மிஸ்டரி பவுலிங் அணிக்கு பக்க பலமாக அமையும். வருணின் காயம் குணம் ஆகும் வரையில் அவருக்கு ஓய்வு அளிக்கபட வேண்டியது கட்டாயம். தோனி மற்றும் ரவி சாஸ்திரி போன்றவர்கள் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இதுபோன்ற சூழ்நிலையில் வழிகாட்டுவார்கள். இந்தியா தனது டி 20 உலகக் கோப்பைப் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராகவரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் விளையாட உள்ளது. இந்தியா தனது இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் வென்று உற்சாக மனநிலையில் உள்ளது.
ALSO READ Ind vs Pak: இந்த இந்திய வீரர்களைக் கண்டு பதறுகிறதா பாகிஸ்தான் அணி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR