எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 போட்டியில் 18 சிக்ஸர்களை விளாசியது, இது டி20 லீக் வரலாற்றில் ஒரு அணியின் 4வது அதிகபட்ச எண்ணிக்கையாகும். எந்த அணி ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்துள்ளது என்பது தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ் - 18 சிக்சர்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் 2023 சீசனின் 33வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அதில் ஒன்று நேற்று (2023 ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 18 சிக்ஸர்கள் அடித்தது ஆகும்.


இதற்கு முன் ஒரு போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்த RCB மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்தது. அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 5 சிக்சர்களை அடித்தனர். 


மேலும் படிக்க | IPL 2023: கோலி கேப்டன்சியில் தொடரும் வெற்றி... மீண்டும் சேஸிங்கில் கோட்டைவிட்ட ராஜஸ்தான்!


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 21 சிக்சர்கள்
ஐபிஎல் 2013 இல் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக 21 சிக்ஸர்களை அடித்து ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச சிக்ஸர்களை அடித்த சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார்.


டெல்லி டேர்டெவில்ஸ் - 20 சிக்ஸர்கள்
டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) ஐபிஎல் 2017 போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 20 சிக்ஸர்களை அடித்தது. ரிஷப் பந்த் தனது 97 ரன்களில் ஒன்பது சிக்ஸர்களை அடித்தார்.


மேலும் படிக்க | WFI தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக தொடரும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 17 சிக்சர்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், ஐபிஎல் 2018 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் 88 ரன்கள் விளாசினார். அந்த போட்டியில் சிஎஸ்கேக்கு எதிராக கேகேஆர் 17 சிக்சர்களை அடித்தது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் - 17 சிக்சர்கள்
நவி மும்பையில் நடந்த ஐபிஎல் 2022 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 சிக்ஸர்களை குவித்தது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சிவம் துபே 95 நாட் அவுட்டில் 9 சிக்ஸர்களை அடித்தார்.


மேலும் படிக்க | ஐபிஎல் 2023: அர்ஷ்தீப் சிங்கின் அசுர வேகத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை உடைந்த ஸ்டம்புகள் - வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ