ஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றார். இது சுவிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரரை விட ஒரு வாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தகக்து.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏடிபி தரவரிசையின் 48 ஆண்டுகால வரலாற்றில் செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் திங்களன்று அதிக வாரங்கள் முதலிடத்தில் தொடர்ந்து இருந்தார்.
கடந்த மாதம் மெல்போர்னில் (Melbourne) நடந்த போட்டிகளில் தனது ஒன்பதாவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை பெற்ற ஜோகோவிச், 311 வது வாரத்தில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்,


இது 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரோஜர் பெடரரின் சாதனையை விட ஒரு வாரம் அதிகமானது. அமெரிக்க பீட் சாம்ப்ராஸின் (Pete Sampras) சாதனையை 286 வாரங்களை தாண்டி பெடரர் ஜூலை 2012 இல் சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Also Read | IPL 2021 இந்த நகரங்களில்தான் நடக்கும்: BCCI அறிவிப்பால் கடுப்பான அணிகள்


ஜோகோவிச் (Djokovic) முதன்முதலில் 2011 ஜூலை 4ஆம் தேதியன்று முதலிடத்தைப் பிடித்தார். ஐந்து வெவ்வேறு நிலைகளில் 311 வாரங்கள் நீடித்து சாதனை படைத்துள்ளார். 33 வயதான ஜோகோவிச், தனது டென்னிஸ் வாழ்க்கையில் 36 ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களையும் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.


தொடர்ச்சியான காயங்கள் ஏற்பட்டதால், 2018 மே மாதம் 22 வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஜோகோவிச், 2018 ஆம் ஆண்டில் விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் ஆகியவற்றை வென்ற பின்னர் அவர் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்தார், அதைத் தொடர்ந்து 2019 ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2019 விம்பிள்டனில் வெற்றியைப் பெற்றார்.
ஜோகோவிச் 88 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார்.


கடந்த சீசனின் ஏடிபி தரவரிசையில் ஆண்டு இறுதியில் நம்பர் 1 ஆக ஆறாவது முறையாக இருந்து சாதனை படைத்து, பீட் சம்ப்ராஸின் நீண்டகால சாதனையை முறிய்டடித்தார். ஜோகோவிச்சின் சிறந்த போட்டியாளர்களான ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் மற்றும் ஜிம்மி கோனர்ஸ் ஆகியோரை விட இவர் ஆறு முறை அதிகமாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.


Also Read | எனது கடினமான தருணங்களில் துணையாக உடன் இருந்தார் Virat Kohli: Glenn Maxwell


ஃபெடரர், ஜோகோவிச் மற்றும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஆண்கள் ஒற்றையர் டென்னிஸில், குறிப்பாக கிராண்ட் ஸ்லாம்ஸில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.


2003 விம்பிள்டன் முதல் 2021 ஆஸ்திரேலிய ஓபன் வரை மூன்று வீரர்களும் 70 கிராண்ட் ஸ்லாம்களில் 58 போட்டிகளில் வென்றுள்ளனர். 2005 பிரெஞ்சு ஓபன் முதல் 2009 ஆம் ஆண்டு விம்பிள்டன் வரை தொடர்ச்சியாக 18 ஸ்லாம்களையும், 2017 ஆஸ்திரேலிய ஓபன் முதல் 2020 ஆஸ்திரேலிய ஓபன் வரை தொடர்ச்சியாக 13 ஸ்லாம்களையும் வென்றுள்ளனர்.


 Also Read | ஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை, அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியவர்!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR