தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் (Badminton), தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார் இந்தியாவின் பிவி சிந்து. தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் (Thailand Open Badminton) தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்று உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் சுற்றில் பிவி சிந்து (PV Sindhu) பங்கேற்கு பெருமை சேர்த்துள்ளார்.  வியாழன் அன்று நடைபெற்ற போட்டியில் மலேசியாவின் கிசோனா செல்வதுரை (Kisona Selvaduray) என்ற வீராங்கனையை 21 - 10, 21 - 12 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் பிவி சிந்து. 


இந்த வெற்றி மூலம் அவர் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் (Thailand Open Badminton) தொடரில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். 


ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்தியாவின் பிரணாய் (Prannoy) தோல்வி அடைந்து வெளியேறினார். இரண்டாம் சுற்றில் மலேசியாவின் டேரன் லியூவிடம் 17 - 21, 18 - 21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.


Also Read | தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத Siraj இன்று graveyard-இல் அஞ்சலி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR