தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத Siraj இன்று graveyard-இல் அஞ்சலி

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தபோது கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் தந்தை காலமானார். அப்போது அங்கிருந்து வர முடியாத இக்கட்டான சூழலை எதிர்கொண்டார் சிராஜ்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 21, 2021, 05:53 PM IST
  • ஐந்து விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் சிராஜ்
  • ஆஸ்திரேலியாவில் சிராஜ் இருந்தபோது, இந்தியாவில் அவர் தந்தை இறந்துவிட்டார்
  • இன்று மயானத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் சிராஜ்
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத Siraj இன்று graveyard-இல் அஞ்சலி

புதுடெல்லி: பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தபோது கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் தந்தை காலமானார். அப்போது அங்கிருந்து வர முடியாத இக்கட்டான சூழலை எதிர்கொண்டார் சிராஜ்.

அந்நிய மண்ணில் வெற்றியை பதிவு செய்து பலரின் பாராட்டுகளையும் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி (Team India) இன்று தாயகம் திரும்பியது. ஹைதாராபாதில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற கிரிக்கெட் (Cricket) வீரர் முகமது சிராஜ், உடனே ஹைதராபாத்தில் உள்ள மயானத்திற்கு சென்று மறைந்த தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார். பார்டர்-கவாஸ்கர் டிராபிக்காக தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள முடியாத நிலையில் இன்று கண்ணீர் மல்க தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார் சிராஜ். 

தந்தை இறந்த துக்கத்தில் இருந்தாலும், தனது கடமையில் இருந்து பின்வாங்காத சிராஜ் (Mohammed Siraj) , ஐந்து விக்கெட்டுகளை எடுத்து போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றினார். அப்போது அனைவரின் பாராட்டு மழையில் நனைந்தாலும், பரவசமான அணியினரிடமிருந்து விலகி, தனக்கென ஒரு கணம் எடுத்து கண்ணீர்விட்டார் சிராஜ்.

Also Read | IPL 2021 அணிகளில் இடம் பெற்ற & OUT ஆன வீரர்கள், முழுமையான பட்டியல்

சிராஜின் தந்தை Mohammed Ghouse, ஆட்டோரிக்ஷா டிரைவராக இருந்தாலும், தனது மகனின் லட்சியமான கிரிக்கெட் கனவை நனவாக்க தனது செலவுகளை குறைத்துக் கொண்டு மகனுக்கு ஆதரவு கொடுத்தவர்.   பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும், மகனின் ஆர்வத்தை மங்கவிடாமல், வளர்த்தெடுத்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற செய்ததில் Mohammed Ghouseஇன் பங்கு என்ன என்பதை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. 

முகமது சிராஜின் தந்தையின் கனவு தான், தன்னை முன்னேற்றியது என்று தனது வெற்றியை தந்தையிடம் அர்ப்பணித்தார் முகமது சிராஜ். “தனது மகன் விளையாட வேண்டும், உலகம் முழுவதும் அவனைப் பார்க்கவேண்டும் என்று என் அப்பா விரும்பினார். இவரது ஆசீர்வாதத்தினால்தான் டெஸ்ட் போட்டியில் எனக்கு ஐந்து விக்கெட்டுகள் கிடைத்துள்ளன. என்னால் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது” என்று சிராஜ் கூறிய வார்த்தைகள் ஆழம் பொதிந்தவை….

Also Read | அந்நிய மண்ணில் வெற்றிகண்டால் வந்தேமாதரம் பரிசு Viral Video

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

More Stories

Trending News