IPL 2024 Purple Cap: ஒவ்வொரு ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரின் இறுதியில் அதிக விக்கெட்டை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருக்கு 'ஊதா நிற தொப்பி' கிடைக்கும். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசு கொடுக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. லீக்சுற்றில் பல பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அனுபவம் வாய்ந்த ரஷித் கான் ஆகியோர் 'ஊதா நிற தொப்பி' வெல்வதற்கு கடும் போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள்.


கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஊதா நிற தொப்பி வென்று வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இந்தமுறை ஊதா நிற தொப்பி வெல்வதற்கு சாத்தியமான ஐந்து பந்து வீச்சாளர்களை பட்டியல் குறித்து பார்ப்போம்.


ஜஸ்பிரித் பும்ரா


மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை. அவரது சமீபத்திய செயல்திறன் நன்றாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில், இந்த சீசனில் இந்த வீரரிடம் மும்பை இந்தியன்ஸ் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும். எனவே அவர் ஊதா நிற தொப்பியை வெல்லும் வரிசையில் முக்கிய போட்டியாளராக இவர் இருப்பார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 120 போட்டிகளில் விளையாடி 23.30 சராசரியில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த செயல்திறன் 5/10 ஆகும்.


மேலும் படிக்க - தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டியா? டுவைன் பிராவோ முக்கிய அப்டேட்


யுஸ்வேந்திர சாஹல்


ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 2022 ஆம் ஆண்டில் ஊதா நிற தொப்பியை வென்றார். அப்பொழுது 17 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 19.51 ஆகவும், எக்னாமிக் விகிதம் 7.75 ஆகவும் இருந்தது.


ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ள இவர், இந்த முறையும் சாகசம் செய்ய முடியும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை யுஸ்வேந்திர சாஹல் 145 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சராசரி 21.68 ஆகும். 6 முறை 4 விக்கெட்டும், ஒரு முறை 5 விக்கெட்டும் எடுத்துள்ளார்.


ரஷித் கான்


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் 17 போட்டிகளில் 20.44 சராசரியில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த சீசனில் அவரது சிறந்த செயல்திறன் 4/30 ஆகும்.


ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ரஷித் கான் 109 போட்டிகளில் விளையாடி 139 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ஐபிஎல் சீசனில் ஊதா நிற தொப்பியை வெல்லும் முக்கிய போட்டியாளராக இருக்கிறார்.


மேலும் படிக்க - ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள்..!


மிட்செல் ஸ்டார்க்


ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) வாங்கியது. 2015க்குப் பிறகு, இந்த தொடர் மூலம் மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கிறார். அவர் 2018 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை.


ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மிட்செல்  ஸ்டார்க் 27 போட்டிகளில் விளையாடி 20.38 சராசரியில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த வேகப்பந்து வீச்சாளர் சமீப காலமாக கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே இந்த ஐபிஎல் 2024 சீசனில் ஊதா நிற தொப்பி வெல்லும் போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


ககிசோ ரபாடா


2020 ஆம் ஆண்டில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிக்காக விளையாடும் போது ஊதா நிற தொப்பியை வென்ற காகிசோ ரபாடா, இந்த சீசனில் மீண்டும் இந்த சாதனையை படைப்பார என அவரது ரசிகர்கள் காத்திருகின்றனர். கடந்த சீசனில் ரபாடாவால் 6 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. 


தற்போது அவர் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் ஒரு பகுதியாக உள்ளார். 2022 ஆம் ஆண்டில், இந்த வீரர் 13 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


ஐபிஎல் தொடரை பொறுத்தவரை  ரபாடா 69 ஐபிஎல் போட்டிகளில் 20.74 என்ற சிறந்த சராசரியுடன் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நான்கு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கும் ஊதா நிற தொப்பி கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


மேலும் படிக்க - "பும்ரா, ஹர்திக் பாண்டியா கதை அன்னைக்கே முடிஞ்சிக்கும்" - காப்பாற்றிய ரோஹித் சர்மா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ