’இந்த பிளேயர் மாதிரி எங்க கிட்ட இல்லப்பா’ இந்திய வீரரை காட்டி பதறும் ஷாகீத் அப்ரிடி
இந்திய அணியில் இருக்கும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா போல் பாகிஸ்தான் அணியில் ஒரு வீரர் இல்லை என ஷாகீத் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் சவாலான அணியை களமிறக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பிளேயிங் லெவனை அறிவித்துள்ளன. 20 ஓவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சவாலான அணியாக திகழ்கிறது. குறிப்பாக அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இருக்கும் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஐசிசி பேட்ஸ்மேன்கள் லிஸ்டில் டாப் 1 மற்றும் 3வது ரேங்கில் இருக்கின்றனர்.
இருப்பினும் இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணி, 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல கடினமாக உழைக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், இந்திய அணியில் இருக்கும் பினிஷர்கள் போல் பாகிஸ்தான் அணியில் இல்லை எனக் கூறியுள்ளார். அந்த பேட்டியில் தொடர்ந்து பேசிய ஷாகீத் அப்ரிடி, "இந்திய அணியில் இருக்கும் ஹர்திக் பாண்டியா போன்ற தரமான பினிஷர்கள் பாகிஸ்தான் அணியில் இல்லை. அவரைபோன்ற ஒரு வீரர் கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அசிப் அலி, குஷிதில் ஆகியோர் அப்படி இருப்பார்கள் என எண்ணினோம்.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களுடைய கேம் இருக்கவில்லை. நவாஸ் மற்றும் ஷதாப் ஆகியோரின் கேமும் சீரானதாக இருப்பதில்லை. திட்டமிட்ட 4 வீரர்களும் எதிர்பார்த்த இடத்தை பூர்த்தி செய்யவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், கடந்த சில போட்டிகளில் செய்த சிறிய தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் 20 ஓவர் உலகக்கோப்பை கனவு, கனவாகவே போய்விடும்" எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | தென்னாபிரிக்க தொடரைவிட்டு விலகிய முக்கிய வீரர்! இந்திய அணிக்கு பின்னடைவு!
மேலும் படிக்க | இந்திய அணிக்கு துணை கேப்டனாகும் சஞ்சு சாம்சன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ