WTC Final: புதுடெல்லி: இந்தியா நியூசிலாந்து இடையில் இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டிக்காக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான கிரிக்கெட் வீர்ரகளில் ஒருவரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் கொதிக்கும் வெயிலில் நடக்கும். இதில், பிட்ச் காய்ந்த பிறகு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அது ஏதுவாக இருக்கும் என்பதால், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவருக்கும் இந்திய அணியில் முக்கிய பங்கு இருக்கும் என இந்தியாவின் முன்னாள் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar) நம்புகிறார். 


கவாஸ்கர் பிட்சின் ரகசியத்தை போட்டுடைத்தார்


கவாஸ்கர் ஜூன் 18 முதல் தொடங்கும் போட்டிக்கான வர்ணனைக் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார். அவர் தற்போது சவுத்தாம்ப்டனில்  இருக்கிறார். கவாஸ்கர் கூறுகையில், “ கடந்த சில நாட்களாக சவுத்தாம்ப்டனில் அதிக வெப்பம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஆடுகளம் வறண்டு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியான சூழல் இருக்கும். எனவே அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் கண்டிப்பாக அணியில் விளையாடக்கூடும்" என தெரிவித்தார். 


இந்த இருவரும் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல உதவுவார்கள் 


பந்துவீச்சு மட்டுமல்ல, ஆல்ரவுண்டரின் திறனின் அடிப்படையிலும் இந்திய அணியில் ஒரு சமநிலை உள்ளது என்று கவாஸ்கர் கூறினார். இது குறித்து அவர் பேசுகையில், “அஸ்வின் (Ravichandran Ashwin) மற்றும் ஜடேஜா பேட்டிங்கிலும் ஆழத்தை தருவதோடு பந்துவீச்சிலும் சமநிலை ஏற்பட உதவுகிறார்கள். உலக சாம்பியன்ஷிப்புக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் தொடரில் வானிலை மற்றும் ஆடுகளம் முக்கிய பங்கு வகிக்கும்" என்று கூறினார்.


ALSO READ:India WTC Final Squad: நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு


இந்திய அணி முழுமையாக தயாராக உள்ளது


இங்கிலாந்து நியுசிலாந்து இடையிலான தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்த பிறகு நியூசிலாந்தின் உற்சாகம் அதிகமாக உள்ளது. ஆனால் பயிற்சி போட்டி எதிலும் பங்குகொள்ளாத போதிலும், இந்திய அணியும் தயார் நிலையில் உள்ளதாக கவாஸ்கர் நம்புகிறார். இது குறித்து கூறிய கவாஸ்கர், " இப்போதெல்லாம் சுற்றுப்பயணங்களில் ஒன்று அல்லது இரண்டு பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. இந்திய வீரர்கள் தங்களுக்குள் பயிற்சி போட்டிகளில் விளையாடினர். இந்த அணி இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் நல்ல கலவையைக் கொண்டுள்ளது. பெரும்பாலான வீரர்கள் பல முறை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். அவர்கள் இங்குள்ள நிலைமையை நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இப்போட்டியை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.


அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார்


அஸ்வினிற்கு இருக்கும் அனுபவம் காரணமாக, அவர் இந்த சுற்றுப்பயணத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் அஸ்வின் பந்துவீசுவதை பார்க்கும் போது, எராபள்ளி பிரசன்னா மற்றும் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சைப் பார்ப்பது போன்ற நிறைவு கிடைக்கிறது என்றும் கவாஸ்கர் அஸ்வினை பாராட்டினார். 


இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், "இவர்கள் அனைவரும் சிறந்த பந்து வீச்சாளர்கள். பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட்களை விளையாடத் தூண்டுவதில் திறமையானவர் என்பதால் பிரசன்னா புத்திசாலி நரி என்று அழைக்கப்பட்டார். ஹர்பஜன் சிங்கும் புத்திசாலித்தனமாக தன் பந்துவீச்சில் பன்முகத்தன்மையைக் கொண்டு வந்தார். அவரிடம் அவரது தூஸ்ராவும் இருந்தது" என்றார். 


அஸ்வினிடம் அவருடைய கேரம் பால் உள்ளது 


கவாஸ்கர் கூறுகையில், "அஸ்வின் பல வகைகளைக் கொண்டுள்ளார். இவற்றில் அவர் ஃப்ளிக்கர் மற்றும் கேரம் பாலையும் சேர்த்துள்ளார். இது மிகவும் அருமையான பந்துவீச்சு வகை" என்றார். 


2018 ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலி (Virat Kohli) மிக நன்றாக விளையாடினார். ஆனால் மற்ற வீர்ரகளால் அப்போது சீம் மற்றும் ஸ்விங் பந்துகளை ஒழுங்காக ஆட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: WTC Final: நாய்க்கு பயிற்சி அளிக்கும் நாயகன் ரவி சாஸ்திரி, வைரல் ஆகும் வீடியோ இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR