சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இன்னும் சில நாட்களில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த பெரிய போட்டிக்கு முன்பு, இந்திய அணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த போட்டிக்கு விராட் கோலியின் படை தயாராக உள்ளது. இதற்கிடையில், சில வேடிக்கையான தருணங்களும் களத்தில் காணக்கிடைத்துள்ளன.
ரவி சாஸ்திரி நாய்க்கு பயிற்சி கொடுத்தார்
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) இங்குள்ள ஏஜஸ் பவுலில் இந்திய அணியின் பயிற்சி அமர்வுக்குப் பிறகு பிட்ச் கியூரேட்டர் சைமன் லீயின் நாய்க்கு பீல்டிங் பயிற்சி அளித்தார். ரவி சாஸ்திரி தனது ட்விட்டர் கணக்கில் வீடியோவை பகிர்ந்து 'இந்திய அணியின் பயிற்சி அமர்வுக்குப் பிறகு எங்கள் வின்ஸ்டன் டென்னிஸ் பந்தைக் கொண்டு பயிற்சி செய்தது' என்று எழுதினார். இந்த வீடியோவில், இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு கிட் பையுடன் களத்தில் இருந்து வெளியேறுவதைக் காண முடிகிறது.
நாய் ஃபீல்டிங் செய்தது
ரவி சாஸ்திரி பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் கையில் ஒரு டென்னிஸ் ரேக்கட்டை வைத்துக்கொண்டுள்ளார். அவர் பந்தை வெவ்வேறு திசைகளில் வீசுகிறார். நாய் ஓடிச்சென்று பந்தைப் பிடிக்கிறது.
Our buddy Winston earns himself a tennis ball after #TeamIndia’s practice session #WTCfinal pic.twitter.com/tEeLYS3xBs
— Ravi Shastri (@RaviShastriOfc) June 15, 2021
ALSO READ: India WTC Final Squad: நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
ரவி சாஸ்திரிக்கு நாய்கள் மீதுள்ள காதல் அனைவரும் அறிந்ததே. இந்திய அணியின் (Team India) பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தனது செல்ல நாய்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பல முறை வெளியிட்டுள்ளார். ரவி சாஸ்திரியின் இந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி முழு அளவில் தயாராக உள்ளது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்னர், விராட் கோலியின் (Virat Kohli) தலைமையில் இந்திய அணி கடுமையாக பயிற்சி செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த பயிற்சியின் போது, பந்தை சரியாக டைம் செய்து அடிக்க முயன்றதுடன், ஆக்ரோஷமான மற்றும் பெரிய ஷாட்களை விளையாடவும் பயிற்சி எடுத்துள்ளனர். நியூசிலாந்திற்கு எதிரான இந்த போட்டிக்கு முன்பு, இந்திய அணியின் பயிற்சி முழுமைப் பெற்று விட்டதாகவே தெரிகிறது. WTC இறுதிப் போட்டி 18 ஆம் தேதி தொடங்குகிறது.
ALSO READ: MS Dhoni: நண்பரின் உயிர் காக்க ஹெலிகாப்டரை அனுப்பினார் தோனி, உயிர் பிழைத்தாரா நண்பர்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR