ஐபிஎல் உள்ளிட்ட பல கிரிக்கெட் தொடர்கள் நடந்தாலும் ரசிகர்களின் ஆர்வம் டெஸ்ட் கிரிக்கெட் மேச் மீதுதான். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மேச் தோல்விக்கு பிறகு தனது தலைமை பொருப்பில் இருந்து விராட் கோலி விலகிக்கொள்வதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து அந்த பொருப்பை பிசிசிஐ ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கியதயது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிர்க்கு பேட்டி அளித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங், எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தலைமை ஏற்கும் பண்பு  ரிஷாப் பண்டிற்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஹோட்டலில் பாட்டில் மற்றும் ரிமோட்டை உடைத்த பாண்டிங் - அதிர்ச்சி தகவல்


தோனியின் தலைமை பண்புகளை சுட்டிக்காட்டி பேசிய யுவ்ராஜ் சிங், தோனியை போன்று தன்னை தானே ரிஷாப் பண்ட் செதுக்கு மெருகேத்தி வருவதாகவும் கூறியுள்ளார். அவருடைய இந்த வயதில் தானும், விராட் உள்ளிட்ட பல வீரர்களும் முதிர்ச்சியில் சன்று பின்தங்கிதான் இருந்தோம் என குறிப்பிட்ட யுவ்ராஜ் சிங், ஆனால் ரிஷாப் பண்ட் இந்த வயதிலேயே தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறினார்.


இப்படிப்பட்ட ஒரு வீரருக்கு நேரமும், வாய்ப்பும் சரியான முறையில் வழங்கப்பட்டால் இந்திய அணிக்கு மிளிர் கல் போன்ற ஒரு வீரர் உருவாவார் எனவும் அவர் கூறினார். மேலும் தனது இந்த கருத்தை சக வீரர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது தனக்கு தெரியவில்லை எனக்குறிப்பிட்டுள்ள யுவ்ராஜ் சிங், டெஸ்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்த ரிஷப் பண்ட்தான் சரியானவர் என சொல்வதில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை எனவும் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் சொதப்பும் இளம் வீரர் - இந்திய அணிக்கு திரும்புவது கடினம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR