ஐபிஎல் திருவிழா தொடங்கி ஜோராக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆரம்ப கட்ட போட்டிகளில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பெற முடியாமல் தவிக்கின்றனர். இரு அணிகள் முதல் இரு போட்டியில் தோல்வியடைந்திருக்கும் நிலையில், ஒரே ஒரு அணி மட்டும் கம்பீரமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த அணி இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ப்ரீத்தி ஜிந்தா பற்றி பேசிய சுரேஷ் ரெய்னா - லைவ் ஷோவில் வெளியேறிய இர்ஃபான் பதான்


ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகும் அணி


ஐபிஎல் 2022-ல் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடும் அணி ராஜஸ்தான் ராயல்ஸ். இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி,  முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.  கேப்டனாக சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 



பலமாக இருக்கும் பந்துவீச்சு


ராஜஸ்தான் ராயல்ஸின் வலுவான அம்சம் அவர்களது பந்துவீச்சு. அந்த அணியில் பல ஆபத்தான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். டி20 கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட்,  இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, பிரசித் கிருஷ்ணா சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நவ்தீப் சைனி டெத் ஓவர்களில் மிகவும் சிக்கனமாக பந்து வீசுகிறார். சுழற்பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் பக்கபலமாக இருக்கிறனர். 



பேட்டிங் லைன்அப்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் நட்சத்திரமாக உள்ளார். போட்டியை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய திறமை கொண்ட அவர், மும்பைக்கு எதிரான போட்டியிலும் வெளுத்து வாங்கினார். இந்த ஐபிஎல் போட்டியில் முதல் சதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிகல் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் ஆகியோர் உள்ளனர். பினிஷராக ஹெட்மியர் கடந்த சில ஆண்டுகளாக முத்திரை பதித்து வருகிறார். ஒட்டுமொத்தமாக வலுவான அணியாக இப்போதைக்கு ராஜஸ்தான் இருப்பதால், கோப்பை வெல்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். 


மேலும் படிக்க | டெல்லியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR