டெல்லியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்

கட்டுக்கோப்பாக பந்துவீசிய குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லியை வீழ்த்தி 2வது வெற்றியைப் பெற்றனர்

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2022, 11:25 PM IST
  • டெல்லி அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி
  • 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது
  • தொடர்ந்து 2வது வெற்றியை பெற்றுள்ளது குஜராத் அணி
டெல்லியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம் title=

புனே மைதானத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, பேட்டிங் களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மேத்யூ வேட் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, விஜய் சங்கர் ஒன்டவுன் களமிறங்கினார். மறுமுனையில் சுப்மான் கில் முதலில் நிதானமாக விளையாடி, பின்னர் அடித்து ஆடினார்.

மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட் ஓய்வு முடிவை திரும்ப பெற்ற பஞ்சாப் கிங்ஸ் வீரர்

20 பந்துகளை எதிர்கொண்ட விஜய் சங்கர் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். 15 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் திவாட்டியா 8 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க, தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மான் கில் 46 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் விளாசினார்.  இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்களாக பிரித்திவி ஷா 10 ரன்களுக்கும், டிம் செய்பெர்ட் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய மண்தீப் சிங் 18 ரன்களுக்கும், அதிரடியாக விளையாடிய கேப்டன் ரிஷப் பன்ட் 29 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பொறுப்பாக விளையாடிய லலித் 25 ரன்கள் ஆட்டமிழந்த நிலையில் அக்ஷர் மற்றும் ஷர்துல் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதனால், இறுதிக் கட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்ததால், குஜராத் அணி பக்கம் ஆட்டம் திரும்பியது. இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

மேலும் படிக்க | பட்லரின் அதிரடியில் வீழ்ந்த மும்பை - தொடர்ச்சியாக 2வது தோல்வி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News