எதிர்காலமே இவர்தான்... சாதனை மன்னனுக்கு விராட் கோலி சூடிய மகுடம்
Virat Kohli On Shubman Gill: மூன்று ஃபார்மட்களிலும் தன்னை போன்று சதம் அடித்த சுப்மன் கில்லை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
Virat Kohli On Shubman Gill: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நேற்று (பிப். 1) நடைபெற்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றதால் வாழ்வா, சாவா என்ற மூன்றாவது போட்டி மீது சற்று எதிர்பார்ப்பு இருந்தது.
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், இந்திய அணி வீரர் சுப்மன் கில் 126 ரன்கள் குவிக்க மொத்தம் நியூசிலாந்து அணிக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, விளையாடிய நியூசிலாந்து அணி 66 ரன்களில் சுருண்டது. இதன்மூலம், 168 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
தொடரை கைப்பற்றியது ஒருபுறம் இருக்க, சுப்மன் கில்லின் இந்த சாதனை சதம் பலராலும் போற்றப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, டெஸ்டில் சதம் அடித்து நிலையான தொடக்க வீரராக மாறியுள்ள கில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதகளப்படுத்தினார். இப்போது, டி20 அரங்கிலும் சதம் அடித்து மூன்று வித போட்டிகளிலும் சதம் அடித்தவர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மேலும் படிக்க | IND vs NZ: இந்திய அணியின் சாதனைக்கு வித்திட்ட நியூசிலாந்து டி-20 தொடர்!
விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இருக்கும் அந்த பட்டியலில் 23 வயதான கில்லும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓப்பனிங்கில் களமிறங்கி ரனக்ளை குவிக்கும் கில், இந்திய அணிக்கு கிடைத்த அடுத்த விராட் கோலியாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். விராட் கோலி ஒன்-டவுணில் இருங்கினாலும், இருவருரிடமும் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்களின் கிளாச்சிகல் பேட்டிங் என்கின்றனர் வல்லுநர்கள்.
அதேபோன்று, சச்சின், விராட் வரிசையில் சதங்களை குவித்து வரும் கில் விரைவில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் என எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்நிலையில், சுப்மன் கில்லின் நேற்றைய ஆட்டம் குறித்து விராட் கோலி கூறிய கருத்து அனைவரையும் 'ஆம்' போட வைத்துள்ளது.
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,"The Future is Here" (எதிர்காலமே இவர்தான்) எனக் குறிப்பிட்டுள்ளார். இது, கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, மூத்த வீரர்கள், வல்லுநர்களின் லைக்ஸ்களை வாங்கியுள்ளது. நேற்றைய வெற்றியின் இந்திய அணிக்கு பல சாதனைகளை படைத்திருந்தாலும், டி20 அரங்கில் இந்தியா சார்பாக அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை விராட் கோலியிடம் இருந்து சுப்மன் கில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IND vs NZ: கோப்பையை பெற்றதும் ஹர்திக் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ