Ind vs NZ Highlights: நியூசிலாந்துக்கு எதிராக அபாரமான இரட்டை சதம் அடித்த ஷுப்மான் கில், டி20 போட்டிகளில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், இதனால் டி20 அணியில் இவரது இடம் கேள்விக்குறியாகும் என்று இருந்த நிலையில், அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தனது முதல் சதத்தை அடித்தார். 54 பந்துகளில் தனது சதத்தை எட்டிய கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஆகியோரை அடுத்து, அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்தியர் ஆனார். இதன் மூலம், டி20யில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றை கில் படைத்தார்.
#TeamIndia | #INDvNZ pic.twitter.com/130FFN6Xhr
— BCCI (@BCCI) February 1, 2023
மேலும் படிக்க | ஐபிஎல்லில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய 5 வீரர்கள் யார் தெரியுமா?
கில் 23 ஆண்டுகள் 146 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டினார், 2010ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 23 வயது 156 நாட்களில் 101 ரன்கள் எடுத்த ரெய்னாவை விட 10 நாட்கள் குறைவாக இருந்தார். கில் 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா 234/4 என்ற மகத்தான ரன்களை பெற்றது. நியூசிலாந்துக்கு எதிராக டி20யில் இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கில்லின் 126 ரன்கள் இப்போது ஒரு இந்தியரின் அதிகபட்ச டி20 ஸ்கோராகும், இது விராட் கோலியின் சாதனையை முறியடித்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோஹ்லி, 2022 ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 61 பந்துகளில் 122 ரன்களை விளாசி, இந்தியாவுக்காக தனது முதல் டி20 ஐ சதத்தை அடித்தார்.
.@ShubmanGill scored a just 63 deliveries and bagged the Player of the Match award as #TeamIndia registered a 168-run victory in the #INDvNZ T20I series deci
Scorecard - https://t.co/1uCKYafzzD… #INDvNZ @mastercardindia pic.twitter.com/OhPzHbgxsK
— BCCI (@BCCI) February 1, 2023
கில் 10 முதல் 14 ஓவர்கள் வரை சாதாரணமாக விளையாடினார். சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 24 ரன்களுடன் வெளியேறினார், பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா அவருக்கு கம்பெனி கொடுக்க வந்தார், அதன் பின்பு கில் வெறித்தனமாக விளையாடினார். இஷான் கிஷனின் மோசமான ஸ்கோர்கள் தொடரும் போது மற்றொரு தொடக்க ஆட்டக்காரனான கில் தனது பெயரை நிலை நிறுத்தி உள்ளார். மறுபுறம் திரிபாதியும் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 44 ரன்கள் எடுத்தார். கில் மற்றும் ஹர்திக் இணைந்து வெறும் 41 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்தின் பந்துவீச்சாளரான பெர்குசன் 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டு கொடுத்தார். மேலும் டிக்னர் தனது 3 ஓவர்களில் 50 ரன்களை குடுத்தார்.
மேலும் படிக்க | திடீர் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர்! காரணம் ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ