ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது. மேலும், நவ. 9, 10ஆம் தேதிகளில் அரையிறுதிப்போட்டியும், நவ. 13ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணி மட்டுமே உறுதியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் நிலைமை, இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்து - இலங்கை போட்டியின் முடிவில்தான் உள்ளது. மேலும், இரண்டாவது பிரிவில் உள்ள அணிகளுக்கு நாளைய போட்டிகள் மிக முக்கியமானதாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, இந்திய அணி ஜிம்பாப்வே உடனான போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வங்கதேசத்திற்கு எதிரான கடந்த போட்டியையே இந்திய அணி போராடி வென்றிருந்தது. ஜிம்பாப்வே அணியும் பாகிஸ்தானை வீழ்த்தி பலம் பொருந்திய அணியாக இருப்பதால் நாளைய போட்டியில் இந்தியா முழு கவனத்தையும் செலுத்தும் என்பது நிச்சயம். 


இந்நிலையில், கடந்த போட்டியில் இந்தியா வீரர்களுக்கு தண்ணி காட்டிய லிட்டன் தாஸிற்கு, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். இதை வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் ஜலால் யூனஸ்  உறுதிப்படுத்தியுள்ளார். 



மேலும் படிக்க | 20 ஓவர் உலக கோப்பையில் தொடரும் நடுவர்களின் மோசமான முடிவ


இதுகுறித்து ஜலால் கூறுகையில்,"நாங்கள் அனைவரும் உணவருந்தும் அறையில் இருந்தபோது, அங்கு விராட் கோலி வருகை தந்து, பேட் ஒன்றை லிட்டன் தாஸிற்கு பரிசளித்தார். என்னை பொறுத்தவரை, லிட்டன் தாஸிற்கு அது பெரும் ஊக்கமளிப்பதாக இருந்திருக்கும். லிட்டன் ஒரு சிறந்த பேட்டர், அவரின் சிறப்பான ஷாட்களை நாங்கள் பார்த்துள்ளோம். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அவர் அற்புதமான வீரர். தற்போது, டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்" என்றார். 



அந்த போட்டியில் லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்களை குவித்திருந்தார். கேஎல் ராகுலின் அற்புதமான த்ரோவால் அவர் ஆட்டமிழந்தார்.  மேலும், அந்த போட்டியில் விராட் கோலியும் 64 ரன்களை எடுத்து, டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். விராட் கோலி தனது 34ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். 


மேலும் படிக்க | Happy Birthday Virat Kohli : 'விராட் எப்படி அந்த சிக்ஸரை அடித்தார்?' - வாயை பிளக்கும் ஆஸி., மூத்த வீரர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ