PAK vs ENG : கடந்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலகக்கோப்பை தொடர், நேற்றுடன் நிறைவுபெற்றது. நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்று, 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. சாம் கரன் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றிருந்த நிலையில், தற்போது ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து டி20 உலகக்கோப்பை வென்றுள்ளது. ஒரு சமயத்தில் இரண்டு உலகக்கோப்பையும் கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | கனவை நினைவாக்கிய இங்கிலாந்து! டி20 உலககோப்பையை வென்று சாதனை!



கிரிக்கெட்டின் பூர்வீகமாக கருத்தப்படும் இங்கிலாந்து அணி பல வருடங்களாக உலகக்கோப்பையையே ருசிப்பார்க்கவில்லை என விமர்சனங்கள் இருந்தன. ஆனால், அதை 2010ஆம் ஆண்டு, பால் காலிங்வுட் தலைமையில் மூன்றாவது டி20 உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து வென்று அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் தொடர்ச்சியாக தனது தற்போது இரண்டு உலகக்கோப்பை பட்டங்களை கைப்பற்றியிருக்கிறது. 



குறிப்பாக, 2015ஆம் ஆண்டில் உலகக்கோப்பை ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களும், மார்கனின் நிகரில்லா திட்டங்களும் இதற்கு காரணமாக அமைந்தது. தனது பேட்டிங் மீது எழுந்த விமர்சனத்தை போக்க, இந்த உலகக்கோப்பைக்கு ஆறு மாதங்களுக்கு முன் தனது ஓய்வை அறிவித்து, கேப்டன் பொறுப்பை பட்லரிடம் கொடுத்த முடிவு என்பது நிச்சயம் யாரும் எதிர்பார்க்காதது. அந்த வகையில், இங்கிலாந்தின் இந்த அசூர வளர்ச்சியையும், உலகக்கோப்பை வென்றதற்கும் பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர். 


இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இங்கிலாந்தின் வெற்றி தொடர்ந்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 


முன்னதாக, பாகிஸ்தான் மூத்த வேகப்பந்துவீச்சாளர், பாகிஸ்தான் அணியின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் இதயம் நொருங்கிப் போய்விட்டதாக பதிவிட்டிருந்தார். அதற்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி, 'இதுதான் கர்மா என்பார்கள்' என பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | சோயிப் அக்தரை பங்கமாய் கலாய்த்த முகமது ஷமி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ