விவிஎஸ் லக்‌ஷ்மன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக 2 டி20 போட்டிகளுக்காக அயர்லாந்திற்குச் செல்கிறார். ராகுல் டிராவிட் ஜூன் இறுதி வாரத்தில் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டிக்கான செல்ல இருப்பதால், லக்ஷ்மண் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.  ஜூன் மாதம் அயர்லாந்தில் நடக்கும் 2 போட்டிகள் கொண்ட T20I தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.  VVS லக்ஷ்மண், சிதான்ஷு கோடக், சாய்ராஜ் பஹுதுலே மற்றும் முனிஷ் பாலி ஆகியோர் இந்த தொடரில் இந்திய வீரர்களுடன் செல்ல உள்ளனர்.  தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளர்கள் இந்த அணியுடன் இணைய உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ENG vs NZ: டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்


இந்தியா ஜூன் 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் 2 டி20 போட்டிகளை ஐ விளையாட உள்ளது.  இங்கிலாந்தில் நடந்த முழுமை பெறாத டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது.  ஜூன் 24 முதல் 27 வரையிலான பயிற்சி ஆட்டத்தில் லெய்செஸ்டர்ஷயர் அணியுடன் விளையாடும் இந்திய டெஸ்ட் அணியுடன் ராகுல் டிராவிட் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக இந்தியா A இன் ஒரு பகுதியாக இருந்த கோடக், பேட்டிங் பயிற்சியாளராக இருப்பார், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரீபியனில் நடந்த U-19 உலகக் கோப்பையில் ஒரு பகுதியாக இருந்த பாலி மற்றும் பஹுதுலே ஆகியோர் பீல்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு தலைமை ஏற்றனர். 



NCA பயிற்சியாளர்கள் மூவரும் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20I அணியில் இணைந்துள்ளனர்.  அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அயர்லாந்திற்கு எதிராக இந்திய B டீம் அனுப்பப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.  ஜூலை 7 முதல் மூன்று டி20 மற்றும் பல ஒருநாள் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முழு வலிமை கொண்ட அணி எதிர்பார்க்கப்படுகிறது. "இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மூத்த துணை ஊழியர்கள் புறப்பட்ட பிறகு, பாலி, பஹுதுலே மற்றும் கோடக் ஆகியோர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ராஜ்கோட் மற்றும் பெங்களூருவில் மீதமுள்ள டி20க்கான பணிகளை மேற்கொள்வார்கள். அவர்கள் ஏற்கனவே டி20 அணியுடன் சிறிது காலம் இருந்தனர். மூத்த துணைப் பணியாளர்கள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள், அவர்கள் பணிக்குத் தயாராக இருப்பார்கள்" என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.  


மேலும் படிக்க | ஷாருக்கானை தொடர்ந்து ஐபிஎல்லில் தடம்பதிக்க விரும்பும் சல்மான்கான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR