நம்பர் 8ல் களமிறங்கும் தோனி.. பிளெமிங் எடுத்த முக்கிய முடிவு.. CSK திட்டம் இதுதான் -மைக் ஹஸ்ஸி
MS Dhoni Batting In IPL 2024: தற்போது பயிற்சியின் போது தோனி நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். ஆனால் அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவான நிலையில் இருப்பதால், அவரின் பேட்டிங் ஆர்டர் 8 ஆக உயர்ந்துள்ளது என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
IPL 2024, Chennai Super Kings: ஐபிஎல் 2024 17வது சீசனின் ஏழாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியாக விளையாடியது. இந்த ஆட்டத்தில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய களம் இறங்குவார் என ரசிகர்கள் எதிர் பார்த்திருந்தனர். ஆனால் அவர் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு வராததால் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங்கை காண்பதற்காக வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திட்டம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சில திட்டமிடல் மேற்கொண்டு இருப்பதால், அதன்படி எம்.எஸ். தோனி எட்டாவது வரிசையில் களமிறங்குவார் என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
நேற்றைய போட்டியில், சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த கேமராவும் தோனி மீது கவனம் செலுத்திக் கொண்டே இருந்தது. அவரை காட்டும் போதெல்லாம் மைதானத்தில் இருக்கும் பெரும் கூட்டம் ஆர்ப்பரிக்கும். எம்.எஸ்.தோனி பேட் செய்வதை கிரிக்கெட் உலகம் கண்டு ஒரு வருடமாகி விட்டது.
ஐபிஎல் 2024 தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவர் களம் இறங்கவில்லை. ரசிகர்களின் காத்திருப்பு நீடித்தது.
நேற்றைய போட்டோயில் அந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியது. 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த சிவம் துபே, 18வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரஷித் கானிடம் அவுட் ஆனபோது, அடுத்து எம்.எஸ். தோனி களம் இறங்குவார் என சேப்பாக்கம் கூட்டம் மூச்சுத் திணறலுடன் காத்திருந்தது. ஆனால் நடந்தது வேறு.. வந்தவர் சமீர் ரிஸ்வி. அவரும் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து 19வது ஓவரின் மூன்றாவது பந்தில் அவுட் ஆக, மீதமுள்ள மூன்று பந்தை ஆட தோனி வருவார் என ஒருபக்கம் ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, மறுபுறம் கேமரா அவரை போக்கஸ் செய்ய.. இந்தமுறை நம்பர் 7ல் அனுப்பப்பட்டவர் ரவீந்திர ஜடேஜா.
இது என்ன ஒரு காட்சி.. மைதானம் சற்று அமைதியானது. இரண்டு போட்டிகள் முடிந்தது விட்டது, இந்த 17வது ஐபிஎல் பதிப்பில் பேட்டிங் செய்ய தோனிக்கும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரசிகர்களின் காத்திருப்பு தொடர்கிறது..
சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறுகையில், 'அணியின் கோச் ஸ்டீபன் பிளமிங் இம்பாக பிளேயர் விதியின் மூலம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை எடுத்து பேட்டிங் ஆர்டரை வலுவடையச் செய்து அடுத்த கட்டத்திற்கு அணியை எடுத்துச் செல்ல நினைக்கிறார். அதன் காரணமாக புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் களமிறங்கிறார் என்று நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் எம்எஸ்டி (MSD) தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறது. அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவான நிலையில் இருப்பதால், அவரின் பேட்டிங் ஆர்டர் உயர்ந்துள்ளது. பயிற்சியாளர் மற்றும் கேப்டன் அதையே விரும்புகிறார்கள். எங்கள் அணி முன்னோக்கி நகர்த்துவதை நாங்கள் விரும்புகிறோம். அவ்வாறு செய்வதில் (வெற்றி பாதையில்) நீங்கள் ஒருபோதும் விமர்சிக்கப்பட மாட்டீர்கள். நாங்கள் வேகமாக விளையாட வேண்டும் என்று ஃப்ளெமிங் விரும்புகிறார்" என்று ஹஸ்ஸி கூறினார்.
மேலும் படிக்க - CSK vs GT: சிக்ஸர் துபே அதிரடியில் குஜராத்தை வெற்றி பெற்ற சென்னை அணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ