ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீர ரஷீத் கானின் மனைவி என்று கூகுளில் தேடினால் கிடைக்கும் பதில் வினோதமானதாக இருக்கிறது. google search தரும் தேடல் முடிவுகள் அனுஷ்கா ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் (leg spinner) Rashid Khan-இன் கணவர் என்று காட்டுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2020 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக விளையாடுகிறார் ரஷீத் கான். இவரது பெயரைப் போட்டு, அடுத்த இரண்டு நாட்களுக்கு google searchஇல் தேடுவதைத் தவிர்க்கலாம். அனுஷ்கா ஷர்மாவை, ரஷீத் கானின் மனைவியாக பார்க்க அநேகமாக யாரும் விரும்பமாட்டார்கள். பிரபல பாலிவுட் நட்சத்திரம் அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி ஆவார். 


ரஷீத் கான் மற்றும் அவரது மனைவி பற்றி google search எஞ்சினில் தேடும் போது, முதலில் அவரது பெயரும், அதைத் தொடர்ந்து ரஷீத் கானின் சாதனைகள் மற்றும் அவர் விளையாடிய போட்டிகள் மற்றும் பங்குபெற்ற அணிகளின் ஒரு சுருக்கமான கட்டுரையைத் தருகிறது. அதில் ரஷீத் கானின் மனைவி என்ற பிரிவில், அனுஷ்கா ஷர்மா என்ற பெயரும், அவரது புகைப்படமும் வருகிறது. 


google search வினோதமான முடிவைத் தருவதற்கான காரணம் என்ன?
2018 இல் ரஷீத் கான் இன்ஸ்டாகிராமில் (Instagram) தனது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது (chat) ரசிகர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கு ரஷீத் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ரஷீத் கானுக்கு பிடித்த பாலிவுட் நடிகை யார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கான், அனுஷ்கா சர்மா மற்றும் பிரீத்தி ஜிந்தா என்று பதிலளித்தார். இது கூகுளில் மிகவும் trend ஆகியது.


இது தான் அனுஷ்கா ஷர்மாவுக்கும், ரஷித் கானுக்கும் இடையிலான தொடர்பு. ஆனால், பாவம் கூகுள் ஒரு சர்ச் எஞ்சின் தானே? பிடித்த நடிகை என்பதை மனைவியாய் புரிந்துக் கொண்டது போலும். அன்று முதல்  இன்றுவரை, ரஷீத் கானின் மனைவி, அனுஷ்கா ஷர்மா என்றே கூகுள் சர்ச் காட்டுகிறது.


திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று ரஷீத் கான் கூறுவது ஏன்?  
22 வயதான ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஆப்கானிஸ்தானின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஒரு முக்கிய காரணத்திற்காக தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்துள்ளதாக ரஷீத் கான் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் ஆப்கானிஸ்தானுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த பிறகு தான், தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியும் என்று தெளிவாக தெரிவித்தார் ரஷித் கான். ஆப்கானிஸ்தான் முதல் உலகக்கோப்பையை வென்ற பிறகுதான் திருமணத்தைப் பற்றி சிந்திக்கப் போவதாக ரஷீத் கான் தெரிவித்தார்.  


Azadi Radio என்ற வானொலியின் நிகழ்ச்சியில் காலந்துக் கொண்ட  ரஷீத் கான், “ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலகக்கோப்பையை நான் திருமணம் என்ற பந்தத்தில் நிச்சயமாக இணைந்துக் கொள்வேன்”என்றார்.  ரஷீதின் இந்த பேச்சிக்கு ட்விட்டரில் பலரும் பலவிதமாக பாராட்டுக்களை தெரிவித்தனர்.  


2015 மற்றும் 2019 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, லீக் ஆட்டங்களைத் தாண்டி அடுத்த சுற்றுக்கு செல்லவில்லை. 2015 ஆம் ஆண்டு டுனெடினில் நடந்த உலகக் கோப்பை போட்டித்தொடரில் 50 ஓவர்கள் கொண்ட 15 போட்டிகளில் கலந்துக் கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 உலகக் கோப்பையில் ஒன்பது போட்டிகளில் ரஷீத் கான் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிக் கனியை பறிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டாலும், 2019 உலகக் கோப்பை  ஆட்டத்தில் ஒன்றில் கூட ஆஃப்கானிஸ்தான் வெற்றிபெறவில்லை.  


Read Also | ஆண் குழந்தையே வேண்டும் என்பது குறுகிய பார்வை: அடித்து தூள் கிளப்பும் அனுஷ்கா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR