ஆண் குழந்தையே வேண்டும் என்பது குறுகிய பார்வை: அடித்து தூள் கிளப்பும் அனுஷ்கா

பாலிவுட் நட்சத்திரங்களில் மிகவும் வெளிப்படையாகப் பேசும் அனுஷ்கா ஷர்மா, எப்போதும் தனது கருத்துக்களை ஆணித்தரமாகவும், துணிச்சலாகவும்  பகிர்ந்துகொள்வார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 3, 2020, 09:35 PM IST
ஆண் குழந்தையே வேண்டும் என்பது குறுகிய பார்வை: அடித்து தூள் கிளப்பும் அனுஷ்கா title=

பாலிவுட் நட்சத்திரங்களில் மிகவும் வெளிப்படையாகப் பேசும் அனுஷ்கா ஷர்மா, எப்போதும் தனது கருத்துக்களை ஆணித்தரமாகவும், துணிச்சலாகவும்  பகிர்ந்துகொள்வார். அதுமட்டுமல்ல, முக்கியமான விஷயங்களில் தனது கருத்துக்களை தைரியமாக சொல்வதற்கு பெயர் போனவர் அனுஷ்கா. அனுஷ்கா ஷர்மா-விராட் கோலி தம்பதிகள் 2021 ஜனவரியில் தங்களது முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆண் குழந்தையைப் பெறுவதை 'பெருமை' என்று சமூகம் ஏன் கருதுகிறது என்பது குறித்த தனது கருத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
 
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது பற்றி எழுதியுள்ள அனுஷ்கா, ஆண் குழந்தையை விரும்புவதற்கான  விருப்பம் மிகவும் குறுகிய பார்வை என்று குறிப்பிட்டார். "நமது சமுதாயத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவது என்பது ஒரு 'பெருமை' என்று கருதப்படுகிறது. நிச்சயமாக, ஒரு பெண் குழந்தையைப் பெறுவதை விட ஒரு துளியும் அதிக பெருமையானது என்று சொல்ல முடியாது. ஆனால் உண்மையில் நடைமுறையில் ஆண் குழந்தை பெறுவதை அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள், இது தவறானது, குறுகிய பார்வை கொண்டது" என்று கருவுற்றிருக்கும் நடிகை அனுஷ்கா தனது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.


 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

தனது பதிவில் இன்னும் சில வார்த்தைகளை கூடுதலாக சேர்த்து அனைவரின் அன்பையும் ஒருமித்து பெற்றுவிட்டார் அனுஷ்கா. அப்படி என்ன தான் எழுதினார் தெரியுமா? ”ஒரு ஆண் குழந்தையை பெற்றவர்களுக்கு ஏற்படும் ஒரே பெருமை, பெண்களை மதிக்கும் விதத்தில் அவர்களை வளர்ப்பதே. இது ஆண் குழந்தையை பெற்ற பெற்றோருக்கான கடமை, அது தான் உங்கள் சமூகத்திற்கான கடமை. எனவே, ஆண் குழந்தையை பெறுவது சலுகையோ அல்லது பெருமையோ இல்லை” என்று அனுஷ்கா எழுதினார்.

"குழந்தையின் பாலினம் உங்களுக்கு பெருமை தராது. ஆனால் ஒரு பையனை நன்றாக வளர்ப்பது சமூகத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய பொறுப்பு, அப்போது தான் பெண்கள் பாதுகாப்பாகவும் இயல்பாகவும் உணர்வார்கள்" என்று ஒரே பந்தில் சிக்ஸர் அடித்துவிட்டார் அனுஷ்கா விராட் கோலி.

அனுஷ்கா தாய்மை அடைந்த செய்தியை ஒரு மாதத்திற்கு முன்பு, தம்பதியினர் தங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்குகளில் அறிவித்தனர். கணவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் அனுஷ்கா தற்போது துபாயில் இருக்கிறார். அங்கு இந்தியன் பிரீமியர் லீக்கின் போட்டிகளில் விராட் வீறு கொண்டு சிக்ஸர் அடித்தால், இங்கு மக்களின் மனதில் தனது ஆக்கப்பூர்வமான கருத்துக்களால் ஆழ இடம் பிடித்து வருகிறார் அனுஷ்கா.  

தொடர்புடைய செய்தி | அப்பாவை உரித்து வைத்திருக்கும் ஹார்டிக் பாண்ட்யாவின் மகன்... வைரலாகும் புகைப்படம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News