இந்திய அணி 2023ஆம் ஆண்டில் முதல் தொடராக இலங்கை அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. சூர்யகுமார் யாதவ் அந்த தொடரை கைப்பற்றுவதில் இந்தியாவுக்கு பெரும் உதவியாக இருந்தார். மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சதம் அடித்து, சர்வதேச அரங்கில் தனது மூன்றாவது டி20 சதத்தை அடித்து, பல்வேறு சாதனைகளை முறியடித்தார். மேலும், அந்த போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கடைசி டி20 போட்டி ஜன. 7ஆம் தேதி  நடந்தது. அடுத்து, ஜன. 10ஆம்  தேதி அன்று  இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படவில்லை. ரோஹித் சர்மா தலைமை தாங்கிய அந்த அணியில் கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு இடம் அளிக்க வேண்டியதால், சூர்யகுமார் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். 


மேலும் படிக்க | மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் ஆன ரிஷப் பன்ட்டுக்கு காத்திருக்கும் சோதனை


தொடர்ந்து, சம்பிரதாயமாக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில்தான் சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுதொடருமா, அல்லது அவர் கழட்டிவிடப்படுவாரா என்ற கேள்விகள் வந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரும், 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்று கொடுத்த கபில் தேவ், சூர்யகுமார் யாதவை அமரவைப்பது குறித்து பேசியுள்ளார்.0



அதில்,"முந்தைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருந்தும் சூர்யகுமார் ஏன் ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரே அணியை வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு வித்தியாசமான நபரை மாற்றலாம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அடுத்த நாள் உங்கள் ஆட்ட நாயகன் (சூர்யகுமார் யாதவ்) கைவிடப்பட்டு, வேறு யாராவது வந்தால், கிரிக்கெட் வீரர்களாகிய எங்களுக்கு அதனை புரியாது.


தேர்வுக்குழுவினர் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை கிரிக்கெட் வாரியத்திடம் விட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறேன். நிறைய கிரிக்கெட் வீரர்கள் வருகிறார்கள். எனவே அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்க வேண்டும். நான் வெளியில் இருந்து பார்ப்பது என்னவென்றால், அவர்களுக்கு மூன்று அணிகள் இருக்க வேண்டும்.  டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றிற்கு தலா ஒரு அணி வேண்டும். அப்போது, பெரிய அணி உருவாகும்" என்றார். 



இந்தியா, நியூசிலாந்து அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று மோத உள்ளது. இப்போட்டி, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Ind vs NZ: இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டி! இந்திய அணியில் என்ன என்ன மாற்றம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ