மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் ஆன ரிஷப் பன்ட்டுக்கு காத்திருக்கும் சோதனை

கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் ரிஷப் பன்ட், தன்னுடைய உடல்நிலை குறித்த மிகப்பெரிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2023, 05:10 PM IST
மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் ஆன ரிஷப் பன்ட்டுக்கு காத்திருக்கும் சோதனை title=

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் மற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ரிஷப் பன்ட் அண்மையில் மிகப்பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். படுகாயங்களுடன் தப்பித்த அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய அவருடைய கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. தொடர் சிகிச்சையில் இருந்த ரிஷப் பன்ட், கடைசி அறுவை சிகிச்சை ஒன்றை செய்து, தற்போது நலமுடன் இருக்கிறார். இதனை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | சமயம் பார்த்து ரோஹித் சர்மாவை கலாய்த்த இஷான் கிஷன்! வைரலாகும் வீடியோ!

2 வாரங்களில் டிஸ்ஜார்ஜ்

தற்போது மருத்துவமனையில் இருக்கும் ரிஷப் பன்ட் 2 வாரங்களில் முழுமையாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலது முழங்கால் தசைநார் மீது இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ரிஷப் பந்திற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவர் விரைவில் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலக கோப்பையில் பங்கேற்க முடியுமா?

அதேநரேத்தில், இரண்டு வாரங்களில் மருத்துவமனையில் இருந்து ரிஷப் பந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின்படி எல்லாம் சரியாக இருந்தால் இரண்டு மாதங்களில் ரிஷப் பந்த் இயல்பு நிலைக்கு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை நடைபெற இருப்பதால், அதில் ரிஷப் பன்ட் பங்கேற்க வாய்ப்புள்ளதா? என்ற சந்தேகம் இருக்கிறது. 

6 மாதங்கள் வரை எடுக்கும்

ஆனால், ரிஷப் பந்தின் தசைநார் காயம் குணமடைய 6 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகுதான் அவர் முழுமையான கிரிக்கெட் பயிற்சியை தொடங்க முடியும் என கூறியுள்ளனர். காயம் குணமடைந்த பின்னரே விளையாடலாமா? வேண்டாமா? என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் 4 முதல் 6 மாதங்களில் ரிஷப் பன்ட் கிரிக்கெட் பயிற்சியை தொடங்க முடியும் என்றும், அதன் அடிப்படையில் அவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா? இல்லையா? என்பது முடிவாகும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகும் தோனி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக முடியாது..! காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Trending News