ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ள நிலையில், எந்த வீரர் அதிக ரன் குவிப்பார், யார் அதிக விக்கெட் எடுப்பார் என ரசிகர்கள் கருத்துக் கணிப்புகளை அள்ளி வீசத் தொடங்கியுள்ளனர். ரசிகர்களே இப்படியென்றால் கிரிக்கெட் பிரபலங்களை மட்டும் இந்த ஐபிஎல் ட்ரெண்ட் சும்மா விட்டுவிடுமா என்ன; அவர்களும் தங்களது கணிப்புகளைக் கூறிவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியும் இதுகுறித்து வாய் திறந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் குறித்துப் பேசிய அவர், விராட் கோலி துவக்க வீரராகக் களமிறங்கினால் இம்முறையும் ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியே முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக பூடகமாகத் தெரிவித்துள்ளார்.


                                                                 


அதேநேரம், விராட் கோலி தொடக்க வீரராகக் களமிறங்குவதும் அல்லது 3ஆவது வீரராகக் களமிறங்குவதும் அந்த அணியின் பேட்டிங் பிளானைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளார். அதேபோல, அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருக்கும் பட்சத்தில் விராட் கோலி துவக்க வீரராகக் களமிறங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?


2016ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்குத் தொடக்க வீரராகக் களமிறங்கிய விராட் கோலி, 973 ரன்கள் விளாசி ஆரஞ்ச் கேப்பைக் கைப்பற்றினார். அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட்  152.03. சராசரியாக  81.08 ரன் அடித்த அவருக்கு 20 ஓவர் தொடர் ஒன்றில் அவர் சார்பாக  அதிக ரன் அடிக்கப்பட்ட தொடராகவும் அமைந்தது. கேப்டன் பொறுப்பைத் துறந்துள்ள விராட் கோலி, நடப்பு ஐபிஎல்லில் வெறும் வீரராகவே மட்டுமே களமிறங்குகிறார். ஆர்.சி.பி அணிக்கு டுபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ‘அந்த’ பிளேயர்தாங்க ரொம்பப் பயம் காட்டுறாரு: கே.எல். ராகுல் ஓபன் டாக்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR