பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: டெல்லியில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் நான்கு தங்கப்பதக்கம் கிடைக்கும். நான்கு இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன் (50 கிலோ), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), நீது கங்காஸ் (48 கிலோ) மற்றும் ஸ்வீட்டி பூரா (81 கிலோ) ஆகியோர் தங்களது அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இதில் நீது மற்றும் ஸ்வீட்டியின் இறுதிப் போட்டி சனிக்கிழமையும், லவ்லினா மற்றும் நிகாத் ஆகியோரின் ஃபைனல் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லோவ்லினா
இதில் நிகத் ஜரீன் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். நிது கங்காஸ் 5-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அலுவா பல்கிபெகோவாவை வீழ்த்தினார். இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன், சீனாவின் லி கியானை 4-1 என்ற கணக்கில் வென்று தனது முதல் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சவீதி பூரா 4-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் சூ எம்மான் கிரீன்ட்ரீயை வீழ்த்தினார். லோவ்லினா போர்கோஹைன் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார்



மேலும் படிக்க: சுப்மன் கில்லுக்கு ராஷ்மிகா மீது ஒரு கண்! - இது அவருக்கும் தெரியுமா? - வைரல் வீடியோ


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எப்பொழுது?
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் லோவ்லினா போர்கோஹைன் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் பார்க்கை எதிர்கொள்கிறார், அதே நேரத்தில் ஸ்வீட்டி பூரா சீனாவின் வாங் லினாவை எதிர்கொள்கிறார். நீது அடுத்து ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற மங்கோலியாவின் லுட்சைகான் அல்டன்செட்செக்கை சனிக்கிழமை எதிர்கொள்கிறார். அதாவது நீது மற்றும் ஸ்வீட்டியின் இறுதிப்போட்டி சனிக்கிழமையும், லவ்லினா மற்றும் நிகாத் ஆகியோரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.


நிகத் ஜரீன் பயணம்
நடப்பு சாம்பியனான நிகாத் 50 கிலோ பிரிவு அரையிறுதியில் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நிகத் கூறுகையில், 'இன்றைய போட்டி சிறப்பாக இருந்தது. நான் தொழில்நுட்ப ரீதியாக குத்துச்சண்டை வீரர்களுடன் சண்டையிடும்போது நான் சிறப்பாக செயல்படுவதை உணர்கிறேன். நான் அவருக்கு எதிராக ஏற்கனவே விளையாடியிருக்கிறேன், அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த குத்துச்சண்டை வீரர்' என்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோமை வீழ்த்தியவர் தான் வலென்சியா. 


நீது கங்காஸ் பயணம்:
நீது கங்காஸ் கடந்த முறை அலுவா பால்கிபெகோவாவிடம் தொலைவில் இருந்து விளையாடியதால் தோல்வியடைந்தார். முன்னதாக இஸ்தான்புல்லில் நடந்த போட்டியில் இந்த குத்துச்சண்டை வீரரிடம் நீது கங்காஸ் தோல்வியடைந்தார். இதுகுறித்து நீது கங்காஸ் கூறுகையில், 'கடந்த முறை தூரத்தில் இருந்து விளையாடியதால் என்னால் மீள முடியவில்லை. இந்த முறை நான் மிக நெருக்கமாக விளையாடினேன். நான் இப்போது நிறைய மேம்பட்டுள்ளேன். முன்பு நான் தூரத்திலிருந்து தாக்குவேன், ஆனால் இப்போது என்னால் நிலைமைக்கு ஏற்ப விளையாட முடியும் என்று நீது கூறினார். நீது சனிக்கிழமையன்று ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற மங்கோலியாவின் லுட்சைகான் அல்டன்செட்செக்கை எதிர்கொள்கிறார்.


மேலும் படிக்க: ரசிகரை வெறித்தனமாக அடித்த பிரபல கிரிக்கெட் வீரர்... தொப்பியை தொட்டதால் கோபம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ