Viral Video: ரசிகரை வெறித்தனமாக அடித்த பிரபல கிரிக்கெட் வீரர்... தொப்பியை தொட்டதால் கோபம்!

Viral Video: நூற்றுக்கணக்கானோர் சூழந்திருந்தபோது, பல பாதுகாப்பு மத்தியில் கிரிக்கெட் வீரர் ஒருவர், ரசிகரை தாக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 11, 2023, 11:32 AM IST
  • அந்த வீடியோவில் இருப்பவர் ஷாகிப் அல் ஹசன்.
  • இவர் வங்கதேச அணியின் கேப்டனாவார்.
  • இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார்.
Viral Video: ரசிகரை வெறித்தனமாக அடித்த பிரபல கிரிக்கெட் வீரர்... தொப்பியை தொட்டதால் கோபம்! title=

Viral Video: வங்கதேசம் உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவரது கோபத்தால்தான் அவர் அடிக்கடி பிரச்சனைகளை சந்திக்கிறார். சில நேரங்களில், ஷாகிப் கிரிக்கெட் நிகழ்வுகளில், சில சமயங்களில் தனிப்பட்ட வாழ்க்கையில் தனது கோபத்தை வெளிப்படுத்திகிறார். 

இந்நிலையில், அவர் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், நூற்றுக்கணக்கானவர்கள் சூழப்பட்டிருந்தபோது, ​​பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஷாகிப் ஒரு ரசிகரை அடிப்பதை பார்க்கமுடிகிறது. இதையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஷகிப் அல் ஹசனுக்கும், சர்ச்சைக்கும் ஏழாம் பொருத்தம்தான். குறிப்பாக வங்கதேச கிரிக்கெட்டில், களத்தில் அவரது கோபத்தை பல சந்தர்ப்பங்களில் அனைத்து தவறான காரணங்களுக்காகவும் அவர் வெளிக்காட்டியுள்ளார். மேலும், அதையடுத்து அவர் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்கிறார். அதில், சமீபத்திய சம்பவமும் அடங்கும். அவரின் தொப்பி மீது ரசிகர் கைவைத்த நிலையில், தொப்பியைக் கொண்டே அவர் ரசிகரை அடிப்பது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க | IPL 2023: தோனியின் சரவெடி.. சேப்பாக்கத்தில் தொலைந்த பந்துகள்..! சம்பவம் இருக்கு

ஷாகிப் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை வழிநடத்தினார். ஷாகிப் தலைமையில், டி20 போட்டியிலும் இங்கிலாந்துடன் வங்கதேசம் மோதி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசம் இங்கிலாந்தை வீழ்த்தியது. 

ஷாகிப் தனது அணியின் வெற்றியைப் குறித்து கூறுகையில்,"நாங்கள் ஆட்டத்தை அணுகிய விதம் அருமையாக இருந்தது. எங்கள் அணியிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. நாங்கள் பந்துவீசும்போது, நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம். ஆனால் யாரும் பதற்றம் அடையவில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து பந்துவீச்சாளர்களும் தங்கள் திட்டங்களை சரியாக மேற்கொண்டனர். சில கேட்சைகளை தவறவிட்டோம். அதைத் தவிர, அனைவரும் நன்றாக பீல்டிங் செய்தனர். பயமில்லாத அணுகுமுறை, அதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம்.

"டி20களில், நீங்கள் அதிகம் யோசிக்காதபோது, சிறப்பாக செயல்படுவீர்கள். அந்தச் சூழலைத்தான் டிரஸ்ஸிங் ரூமில் உருவாக்க முயற்சிக்கிறோம். இதைத் தொடரலாம் என்று நம்புகிறோம். இது மிகவும் நல்ல தொடக்கம். நீங்கள் 2024ஆம் ஆண்டு குறித்து நினைத்தால், நாங்கள் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை விளையாடுவோம். அதை நாங்கள் இங்கிருந்து தொடங்கலாம். உலகக் கோப்பை வரும்போது நாங்கள் சிறந்த அணியை உருவாக்கினால் மட்டுமே நாங்கள் முன்னேற முடியும்" என்றார். முன்னதாக, வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

மேலும் படிக்க | IPL 2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News