1. 20 ஒவர் தொடர் வெற்றி 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20 ஓவர் உலகக்கோப்பை முடிந்தவுடன் இந்தியா வந்த நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, 3 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று நியூசிலாந்து அணியை வொய்ட்வாஷ் செய்தது. டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்த தொடரில் களமிறங்கவில்லை. இந்திய அணியில் விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.


2. முதல் டெஸ்ட் போட்டி டிரா


இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கியது. ரகானே தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இப்போட்டியில் இந்திய அணி, நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. 9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணியின் கடைசி நாளில், கடைசி விக்கெட்டுக்கு 51 பந்துகளை எதிர்கொண்டு போராடி தோல்வியை தவிர்த்தது.


3. 2-வது டெஸ்ட் - இந்தியா அபாரம்


மும்பை வான்கடேவில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு, இந்திய அணிக்கு திரும்பிய விராட்கோலி தலைமை தாங்கினார். முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்த இந்திய அணி, நியூசிலாந்தை 62 ரன்களுக்கு சுருட்டி அபாரமான ஃபர்மாமென்ஸைக் காட்டியது. 2வது இன்னிங்ஸில் 276 ரன்கள் எடுத்து டிக்ளோர் செய்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து 167 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.


ALSO READ | BWF உலக டூர் பைனல்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை P.V.சிந்து!


4. கேப்டன் விராட்கோலி


நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியதன் மூலம் 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற 14 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கேப்டன் விராட் கோலி, இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை தாங்கி 50 வெற்றிகளுக்கு மேல் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்  


5. அஜாஸ் படேலின் சரித்திரம்


நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளரான அஜாஸ் படேல், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார். இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 3வது வீரர் என்ற சரித்திரத்தை படைத்தார். மேலும், இந்திய அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையும் அவர் வசமானது. 


6. டெஸ்ட் தரவரிசை; இந்தியா நம்பர் 1


நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய நியூசிலாந்து அணி, 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 


7. நியூசிலாந்தின் சோகம்


நியூசிலாந்து அணி, 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வென்றதில்லை என சோகம் 30 ஆண்டுகளைக் கடந்து இன்னும் தொடர்கிறது. 1955 ஆம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி, இதுவரை ஒரு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியதில்லை.


ALSO READ | 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!


8. அஷ்வின் சாதனை


நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய அஷ்வின், சொந்த மண்ணில் விரைவாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 49 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். 48 போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முத்தையா முரளிதரன் முதல் இடத்தில் உள்ளார். இந்த தொடரின் நாயகனாவும் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் 9வது முறையாக தொடர்நாயகன் விருதை அவர் பெறுகிறார்.


9. மயங்க் அகர்வால் 


2வது டெஸட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களை விளாசிய மயங்க் அகர்வால், 2வது இன்னிங்ஸில் 62 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தபோது, இந்திய அணி கௌரவமான ஸ்கோர் எடுக்க உதவினார், அவர், 2வது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 


10. ஸ்ரேயாஸ் - டிராவிட்


நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கான ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் சதமடித்த அவர், 2வது இன்னிங்ஸிலும் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் மற்றும் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இணைந்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளாராக டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, விளையாடிய 2 தொடர்களையும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR