372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி.    

Written by - RK Spark | Last Updated : Dec 6, 2021, 11:05 AM IST
372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!  title=

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.  டி20 போட்டியில் 3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்தது இந்திய அணி.  அதன்பின்பு முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டி டிராவில் முடிந்தது.  போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி சீக்கிரமே முடிக்கப்பட்ட தால் இந்திய அணி வெற்றி நழுவியது.  அதன்பின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 3ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. 

ALSO READ ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்?

முதல் இன்னிங்சில் களம் இறங்கிய இந்திய அணி 325 ரன்கள் குவித்தது.  மயங்க் அகர்வால் 150 ரன்கள் விளாசினார்.  புஜாரா, கோலி, அஸ்வின், உமேஷ் யாதவ் போன்றோர் 0 ரன்களில் வெளியேறினாலும் இந்திய அணி ஒரு நல்ல ஸ்கோரை எட்டியது.  அதன்பின்பு முதல் இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணியை 62 ரன்களில் ஆல்-அவுட் செய்தது இந்தியா.  

 

263 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி பாலோ ஆன் கொடுக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் கேப்டன் கோலி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியை பேட்டிங் ஆட செய்தார்.  இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது இந்திய அணி.  540 ரன்களை நியூசிலாந்து அணிக்கு டார்கெட் ஆக செட் செய்தது இந்தியா.  

 

2-வது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்திய அணி இந்த போட்டியை வெல்லலாம் என்ற நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது.  போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே நியூசிலாந்து அணியின் மீதமுள்ள விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா.  இதன் மூலம் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் என இரண்டையும் கைப்பற்றி சாதனை படைத்தது இந்திய அணி.  மேலும் இந்தியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 14 முறையாக டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா.

 

ALSO READ ஒமிக்ரான் பீதி: இந்தியா-தென்னாப்ரிக்கா தொடர் ஒத்திவைப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News