11-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை - சில்மிஷ இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!
நாங்குநேரியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் இதற்கு காரணமான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சவுண்ட் சர்வீஸ் வேலை செய்வதற்காக பணகுடியை சேர்ந்த இசக்கியப்பன் என்ற மஸ்தான் என்பவர் வந்துள்ளார். அந்த கிராமத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சவுண்ட் சர்வீஸ் பணியை கவனித்து வந்துள்ளார்.
அப்போது அந்த மாணவிக்கும் இசக்கியப்பனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பின் காரணமாக அந்த மாணவி இசக்கியப்பனுக்கு பணம் மற்றும் தங்க நகைகள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளடைவில் மாணவிக்கும் இசக்கியப்பனுக்கும் இடையே நெருக்கம் அதிகமானதாகவும் அவர்கள் தனிமையில் சந்தித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு அந்த மாணவிக்கு வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாணவியின் வயிற்றில் நீர்க்குமிழிகள் இருப்பதாகவும் வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை எனவும் கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாணவிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்படவே நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சேர்த்துள்ளனர்.
மேலும் படிக்க | திருப்பத்தூரில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது!
அங்கு சோதித்துப் பார்த்த மருத்துவர்களுக்கு மாணவி பிரசவம் அடைந்திருப்பது தெரியவந்து. பின்பு சிறிது நேரத்தில் மாணவிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் நான்குநேரி மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
நான்குநேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் இசக்கியப்பன் என்பவருடன் ஏற்பட்ட நட்பினால் தான் இதுபோன்ற நடந்ததாக மாணவி கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று தனிப்பிரிவு போலீசார் பணகுடியில் வைத்து இசக்கியப்பனைகைது செய்து நாங்குநேரி அழைத்துச் சென்றனர். தற்போது அவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | கரூர் போக்சோ வழக்கில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR