18+ வயதினருக்கு தடுப்பூசி திட்டம் தொடக்கம்!
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர், மருத்துவ பணியை தொடங்க தமிழக சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் உச்சமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,297 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு (Coronavirus) உள்ளாகி 365 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் (Tamil nadu) இதுவரையிலான மொத்த பாதிப்பு 16,99,225 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் வருகிற 29 முதல் 31 தேதிக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என, பல கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.
ALSO READ | உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி (Corona Vaccine) போடும் திட்டம் திருப்பூரில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கடந்த ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையால் தமிழகத்தில் அந்த திட்டம் தாமதமாக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக தடுப்பூசி (Vaccination) நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசு நேரடியாக 10 லட்சத்து 62 ஆயிரம் டோஸ் மருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. அவற்றில் 9 லட்சத்து 62 ஆயிரம் டோஸ் மருந்துகள் தமிழகம் வந்துள்ளன. இதில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும், 7 லட்சத்து 96 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் அடங்கும்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR