பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் ரூ.417.18 கோடி அளவுக்கு மது விற்பனை செய்யபட்டுள்ளதாக தகவல்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா (Coronavirus) காரணமாக கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்த டாஸ்மாக் (Tasmac) கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பாடு வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மது விற்பனை கணிசமாக உயர்வது வழக்கம். அந்த வகையில் தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.


இந்நிலையில், தமிழகத்தில் (Tamil Nadu) 2 நாட்களில் ரூ. 417.18 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் போகி பண்டிகை அன்று ரூ.147 கோடிக்கு மது பானங்கள் (Alcohol) விற்பனையான நிலையில் நேற்று ரூ.269 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ. 55.27 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை (Chennai) மண்டலத்தில் ரூ.54.47 கோடி, திருச்சி மண்டலத்தில் 56.39 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.50.12 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.50.18 கோடிக்கும் மது விற்பனையாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருவாயானது கடந்த ஆண்டை விட அதிகம் என்று கூறப்படுகிறது.


ALSO READ | அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: PMK!


முன்னதாக இந்த மாதம் இன்றும், ஜனவரி 26 மற்றும் 28 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் (Republic Day) மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி அந்த 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR