சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காரணத்தினால் இன்று 118 அடியை கடந்த நிலையில் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரை முழுவதும் அப்படியே வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இன்று காலை 5 மணி முதல் 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் (Mettur Dam) திறக்கப்பட்ட நிலையில் 5.30 மணிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மணிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 6.30 மணி அளவில் 20 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | சென்னையில் கனமழை: முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு


இதனால் காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது நீர் திறப்பின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


 



 


முன்னதாக, உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு கருதி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் தொடர் மழை காரணமாக (TN Weather updates) சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


அதேபோல் கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வானிலை முன்னெச்சரிக்கை:
தற்போது திருநெல்வேலி, கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக் கூடும் என்றும், அதையடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


ALSO READ | தமிழகத்தில் கனமழை: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதமர் உறுதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR