சென்னையில் கனமழை: முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 8, 2021, 11:24 AM IST
சென்னையில் கனமழை: முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். சாலை எங்கும் தேங்கியுள்ள தண்ணீர் தேங்கியுள்ளது. சில தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இதனை தொடர்ந்து நேற்று சென்னை நகரின்  பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்  மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெறும் பணிகளை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 

ALSO READ | சென்னையில் கனமழை: பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் அவதி..!!

சென்னையில் 24 மணி நேரத்தில் 20.செ.மி மழை பெய்துள்ள கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், 500 இடங்களில் பம்புகள் மூலம் தேங்கி இருக்கு மழை நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அரசால்
160 நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தற்போது 44 மையத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று, முதல்வர் ஸ்டாலின் துறைமுகம், பெரம்பூர், ராயபுரம் மற்றும் ஆர்.கே நகர் தொகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

ALSO READ | தமிழகத்தில் கனமழை: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதமர் உறுதி

சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் கீழ்கண்ட இடங்களில் நேற்று (07.11.2021) காலை10.30 மணி முதல் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின், எழும்பூர், டவுட்டன், கே.என் கார்டன், படலம், புதிய அரண்மனை சாலை, ஓட்டேரி இடது பாலம், கான்பூர் நெடுஞ்சாலை, பாடி பாலம், சத்யா நகர் தங்குமிடம், பாபா நகர், ஜிகேஎம் காலனி, ஜவஹர் நகர், காகித ஆலை சாலை ஆகிய இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News