சென்னையில் நேற்று முன் தினம் மாலை தொடங்கிய கனமழை இரவு முழுவதும் பெய்ததன் காரணமாக, சென்னையில் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு மட்டும் மொத்தம் 207 மிமீ மழை பெய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியதை அடுத்து செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது.
மேலும், மழை நீர் வடியாததால் இரவு முமுவதும் பல இடங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு தமிழத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.
ALSO READ | சென்னையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு; பொதுமக்கள் அவதி!
இது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசினேன். மாநிலத்தின் மழை நிலவரம், பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் @mkstalin உடன் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன்.
— Narendra Modi (@narendramodi) November 7, 2021
ALSO READ | சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR