வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் கரடிகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கரடிகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. கரடிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. கரடிகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரடியை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான்! பொதுவாக கரடியை கண்டால் யாரும் அந்த இடத்தில் நிற்பதில்லை. அங்கிருந்து ஓடி விடுவார்கள். அப்படிப்பட்ட கரடிகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. கரடிகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். அந்தவகையில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோவிலும் இதே போன்ற காட்சி காணப்படுகிறது. இந்த வீடியோவில், உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த பூஜை பொருட்கள் கதவுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்வதை நாம் காணலாம். 


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


தொடர்ந்து இதே பகுதியில் கரடி மூன்றாவது முறையாக உலா வருவதால் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தலைகுந்தா பகுதியில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகள் மட்டுமல்லாமல் கோவில்களுக்குள்ளும் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தலைக்குந்தா ,அழகர் மலை ஆல்காடு நகர் உள்ளிட்ட பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.