கண்மாய்க்கு வழிபாடு - ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரம்மாண்ட கிடா விருந்து.!
திருமலை அருகே விநோத திருவிழா- 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து.
சிவகங்கை அருகே உள்ள கிராம மக்கள் கண்மாயில் உள்ள மடையை தெய்வமாக நினைத்து கிடா வெட்டி வழிபாடு செய்தனர்.
சிவகங்கை அடுத்துள்ள திருமலை கிராமம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமம். இங்குள்ள பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் கண்மாயில் இருந்து கிடைக்கிறது. இதனால் கண்மாய்யை மடைக் கருப்பணசாமியாக நினைத்து இந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் வழிபாடு செய்து, கிடா வெட்டி விருந்து உண்டு கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது அந்த ஊரின் வழக்கம்.
மேலும் படிக்க | இப்படி செஞ்சா கள்ளழகர் சிலைக்கே பாதிப்பு : எச்சரிக்கும் பட்டர்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா தடைப்பட்டிருந்தது. தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நள்ளிரவு நேரத்தில் கண்மாய்க்கு பூஜை செய்த கிராம மக்கள், கறுப்பு நிற ஆடுகளை மட்டும் மடைக்கருப்பண சாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். தங்களின் விருப்பத்தினை நினைத்து வேண்டி செல்வதும், பின்னர் வேண்டுதல் நிறைவேறினால் அதற்கு கிடா வைத்து வழிபாடு செய்பவர்களும் உண்டு. இந்த ஆண்டு கிராமத்தினர் வேண்டுதல் நிறைவேறியதின் பலனாக 267 கறுப்பு நிற ஆடுகளை பலிகொடுத்து மடை கருப்பண சாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் படிக்க | ஆட்டை தேடிவந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி!
அதனை தொடர்ந்து கிராமத்தினர் கெளலி வரம் கேட்டு அது கிடைத்த பின்னர் விருந்தும் வைத்தனர். இந்த விருந்தில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நள்ளிரவு நேரத்தில் பங்கேற்று கிடா விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR