விமர்சகர்களுக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்... பத்து முக்கிய தகவல்கள்
தனது அரசியல் பிரவேசம் குறித்து தெளிவுப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த். அவரின் கூறிய பத்து முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழகத்தின் பெரும் ஆளுமைகளான செல்வி ஜெயலலிதா (Jayalalithaa) மற்றும் கலைஞர் கருணாநிதி (Karunanidhi) மறைவை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) அரசியலுக்கு வருவார் எனவும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவார் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தது. அதை மெய்பிக்கும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவேன். 234 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுவேன் என ரஜினிகாந்த் அறிவித்தார். மேலும் நேரடியாக 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும், விரைவில் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று நடிகர் ரஜினி (Rajini) கூறியிருந்தார்.
மேலும் படிக்க: நாட்டின் அமைதிக்காக அனைத்தையும் செய்யத் தயார்: நடிகர் ரஜினிகாந்த் உறுதி
தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் (Tamil Nnadu Assembly) நடைபெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் பணிகளை ரஜினிகாந்த் (Rajinikanth) முடக்கி விட்டார். அந்த வகையில் கடந்த வாரம் சென்னை (Chennai) கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்தரா மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இன்று மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் லீலா பேலஸ் ஓட்டலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
இன்று அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், பேசத் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) கூறிய முக்கிய பாயின்ட் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க: என்னை பாஜகவின் ஊதுகுழல் எனக்கூறுவது வேதனை அளிக்கிறது: ரஜினிகாந்த்
முதலில் ஊடக நண்பர்களுக்கு நன்று கூறிய ரஜினிகாந்த், சில விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தச் சந்திப்பு என்றார்.
> அரசியலுக்கு வருவதாக 25 வருடங்களாக நான் சொல்லக் கொண்டிருக்கவில்லை. 2017 டிசம்பர் மாதம் தான் அரசியலுக்கு வருவதாகக் கூறினேன். இனி என்ன பற்றி தவறான தகவலை சொல்லாதீர்கள்.
> தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறினேன். அந்த சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசிலுக்கு வரக்கூடாது. அது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சக்கரப் பொங்கல் வைப்பது போல் ஆகிவிடும் என்றார்.
மேலும் படிக்க: டிவிட்டரில் டிரெண்டாகும் ‘#வீதிக்குவாங்க_ரஜினி’ ஹேஷ்டேக்!!
> நல்ல நோக்கங்களை கொண்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதற்கு நான் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
> நான் என்றைக்குமே முதல்வராக என்னை நினைத்துப் பார்த்தது கிடையாது. முதல்வர் பதவி மீது விரும்பமும் கிடையாது. சட்டப்பேரவைக்கு சென்று உட்கார்வது, பேசுவது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை.
> 1996 ஆம் ஆண்டே என்னை பதவி தேடி வந்தது. ஆனால் நான் அப்பொழுதே மறுத்துவிட்டேன்
மேலும் படிக்க: வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள் மத்திய அரசை சாடிய ரஜினிகாந்த்
> அரசியலில் எனக்கு பிடிக்காத வார்த்தை "அழகு பார்ப்பது" என்பது தான். கட்சிக்கு ஒரு தலைமை மற்றும் ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது கட்சியில் இருக்கும்.
> அரசியலில் எனக்குப் பிடித்த தலைவர் அண்ணா. அவர் அழைத்து வந்தவர்கள் தான் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் தற்போது அங்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை பயன்படுத்துக்கொள்ள வேண்டும்.
> திமுக கட்சிக்கு 30 சதவீதம் வாக்கு கிடைத்தது. ஆனால் கலைஞருக்காக 70 சதவீதம் வாக்குகள் கிடைத்தது.
> அதேபோல அதிமுக கட்சிக்கும் அதேபோல தான். அதிமுகவுக்கு 30 சதவீதம் வாக்கு கிடைத்தது. ஜெயலலிதாவுக்காக 70 சதவீதம் வாக்குகள் கிடைத்தது.
> எனவே ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் இப்போது நடக்கவில்லை என்றால் எப்போதும் நடக்காது.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.