டிவிட்டரில் டிரெண்டாகும் ‘#வீதிக்குவாங்க_ரஜினி’ ஹேஷ்டேக்!!

டிவிட்டரில் இந்தியா அளவில் ‘வீதிக்கு வாங்க ரஜினி’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Updated: Feb 15, 2020, 03:12 PM IST
டிவிட்டரில் டிரெண்டாகும் ‘#வீதிக்குவாங்க_ரஜினி’ ஹேஷ்டேக்!!

டிவிட்டரில் இந்தியா அளவில் ‘வீதிக்கு வாங்க ரஜினி’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் நானே குரல் கொடுப்பேன் என்று ரஜினிகாந்த் எங்கே போய்ட்டாரு என்ற கேள்வியுடன் வீதிக்கு வாங்க ரஜினி என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை வண்ணாரபேட்டையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தியதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இந்த சம்பவத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் டிவிட்டரில் #வீதிக்குவாங்க_ரஜினி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

" இஸ்லாமியர்களுக்குப் பிரச்சினை என்றால் முதல் குரல் எனது குரல் என்று சொன்ன ரஜினி இப்போதாவது வீதிக்கு வாருங்கள்" என்று அழைக்கும் விதமாக இந்த பதிவுகள் அமைந்துள்ளன.