Derogatory comments: நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது
நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் கதறியழும் வீடியோ வைரலாகிறது
சென்னை: தன்னை தானே சூப்பர் மாடல் என கூறிக் கொள்ளும் நடிகை மீரா மிதுன் (Meera Mitun) இன்று உண்மையிலுமே வேறு எந்த நடிகைகளும் ஏற்படுத்தாத ஒரு சூப்பர் பதிவை ஏற்படுத்தியுள்ளார். நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் கதறியழும் வீடியோ வைரலாகிறது.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டாலும், எதிர்மறை கருத்துக்களால் பிரபலமானவர். பிரபல நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றியும், அவர்களது மனைவிகளைப் பற்றியும் வாய்க்கு வந்தபடி பேசினார். அதுமட்டுமல்ல, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளான, த்ரிஷா, நயன்தாரா உட்பட பலரும் பிரபலங்கள் தன்னுடைய முகத்தையும், உடை வடிவமைப்பையும் நகலெடுப்பதாக சொல்லி சர்ச்சைகளைக் கிளப்பியவர்.
அவர் அரசியலையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் ஆட்சி சரியில்லை என்றும், பிரதமர் மோடிக்கு மீரா மிதுன் விடுத்த ட்விட்டுகள் எல்லாம் சமூக வலைதளங்களில் (Social Media) கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானது. தற்போது மீரா மிதுன் கைது செய்யப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் வரவேற்பு பெருகிவருகிறது.
இப்படி சர்ச்சைகளை கிளப்பியே தன்னை பேசுபொருளாக வைத்துக் கொண்டிருந்த நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு வெளியிட்ட துடுக்குத்தனமான பதிவு தான் அவரை தற்போது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய காரணமானது. அந்தப் பதிவில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து
அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை குறித்து அவதூறாக பேசினார். அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் கூறியிருந்தார். அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால், அவர்களை அனைவரும் திட்டுவதாகவும் மீரா கூறியிருந்தார்.
Also Read | Meera Mithun: நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில், பல்வேறு கட்சியினர் மற்றும் அரசியல் சாரா இயக்கங்கள் தமிழகத்தின் பல காவல் நிலையங்களில் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தன.
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாதிய ரீlதியாக பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
கேரளாவில் தங்கியிருந்த மீரா மிதுனை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். சில திரைப்படங்களில் நடித்துள்ள மீரா மிதுன், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
ALSO READ | என் மூஞ்சிய பாக்கவே புடிக்கல, நான் தற்கொலை பண்ணிக்க போறேன்: மீரா மிதுன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR