சுதீப்தோ சென் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இப்படத்திறகு கண்டனம் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவையில் எஸ்.பி வேலுமணி:


கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியில்,  மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டார். இந்த விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கே ஆர் ஜெயராம் உள்ளிட்டோர் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த பலர் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
“காட்சிகளை நீக்க வேண்டும்..”


கட்சி சார்பாக நடைப்பெற்ற விழாவில் அ.தி.மு.க தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியிலல் வேலுமணி, சமீபத்தில் வெளியான கேரளா ஸ்டோரி படம் குறித்து பேசினார். அப்போது, எந்த படமும் எந்த மதத்தையும் புண்படாத வண்ணம் சமீபத்தில் வெளியாகியுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள கேரளா ஸ்டோரி பட காட்சிகளை நீக்க வேண்டும் என கூறினார். 


மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி வெளிநாடு பயணம்


அன்று விஸ்வரூபம்..இன்று கேரளா ஸ்டோரி..


கேரளா ஸ்டோரி படத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என்று பேசிய வேலுமணி, தொடர்ந்து தி.மு.க ஆட்சி குறித்தும் பேசினார். அப்போது,  தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்றும் சிறுபான்மை மக்கள் ஏமற்றப்படுகிறார்கள் என்றும் கூறினார். மேலும், 50 வருடமாக சிறுபான்மை மக்கள் போராடிய கபர்ஸ்தான் (மைய வாடி) கடந்த அதிமுக ஆட்சியில் அமைத்து கொடுத்தோம் என கூறினார்


தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர், “சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள கேரளா ஸ்டோரி படத்திற்கு இஸ்லாம், ஜமாத் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எந்த படமும் எந்த மதத்தையும் புண்படுத்த கூடாது” எனக்கூறினார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்த காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி கூறினார். 


ஆதரவும் எதிர்ப்பும்:


தி கேரளா ஸ்டோரி திரைப்படம வெளியாவதற்கு முன்பிருந்தே தொடர்ந்து ஆதரவையும் பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் பிரணாயி விஜயன் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, பிரதம் நரேந்திர மோடி கர்நாடகத்தில் நடைப்பெற்ற பிரச்சாரத்தின் போது, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். நடிகை கங்கனா ரனாவத், கேரளா ஸ்டோரியின் கதை உங்களை தாக்கினால் நீங்கள்தான் தீவிரவாதி என்று கூறி சர்ச்சைக்கு உள்ளானார். 


மேலும் படிக்க | வெளிநாட்டில் உயிரிழந்த மகன்..உடலை மீட்க முடியாமல் ஆட்சியரிடம் மனு கொடுத்த பெற்றோர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ