நீலகிரி: வேட்புமனு தாக்கலுக்கு லேட்டாக வந்த எல்.முருகன்! பாஜக போராட்டம், காவல்துறை தடியடி
நீலகிரி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய லேட்டாக எல்.முருகன் வந்ததால் அதிமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக தடியடி நடத்தி காவல்துறை கூட்டத்தை கலைத்தது.
நீலகிரி தொகுதியில் பதற்றம்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிதியில் பாஜக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இரு கட்சியினரும் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக செல்ல தயாராக ஒரே பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினருக்கு 10 மணியும், அதிமுகவினருக்கு 11 மணியம் நேரம் ஒதுக்கப்பட்டது. பாஜகவினர் வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்ப தாமதமானதால் அதிமுகவினர் தாங்கள் முன்னே செல்வதாக கூறினர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட, அதிமுகவினரும் கோஷம்போட்டனர். பாஜகவினர் வெற்றிவேல், ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோசமும், அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியார் வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
காவல்துறை தடியடி
காவல்துறையினரின் கட்டுபாடுகளை மீறி இருக்கட்சியினரும் கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்ததால் லேசான தடியடி நடத்தி காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர். அதிமுக, பாஜக என இரு தரப்பினர் மீதும் காவல்துறை தடியடி நடத்தியது. அப்போது தொண்டர்கள் சிதறிஓடியதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நீலகிரி தொகுதி வேட்பாளர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் தாமதமாக அங்கு வந்தவுடன் பாஜகவினர் ஊர்வலம் தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அண்ணாமலை போராட்டம்
இதன்பிறகு பாஜக தொண்டர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து எல் முருகன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். அவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், " நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வெற்றி வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல் முருகன் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, பாஜக தொண்டர்களோடு ஊர்வலமாக சென்றார். அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை தடியடிநடத்தி கூட்டத்தை கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தடியடியால் காயமுற்ற பாஜக தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய நமது மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் "ஊட்டி எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும்…” என போராட்டம் நடத்தி கொண்டிருகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஈரோடு திமுக வேட்பாளர் தேர்வில் அமைச்சர் முத்துசாமி அப்செட்! களநிலவரம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ